Header Ads



சீமெந்தின் விலையும் அதிகரித்தது - அனுமதியளிக்கவில்லை என்கிறது அதிகார சபை


சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் தொடர்பில் பேசப்பட்டுவரும் நிலையில், சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல், 1,005 ரூபா வரையில் சந்தையில் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில், நுகர்வோர் அதிகார சபையிடம் எமது செய்தி சேவை வினவியது.

அதற்கு பதிலளித்த நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர், நாட்டின் பல பகுதிகளில் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது அதிகார சபையினால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.