Header Ads



அம்பாந்தோட்டையில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு பைசர் தடுப்பூசி, ஏனைய மாவட்டங்கள் புறக்கணிப்பு – GMOA கடும் விசனம்


குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது ஏன் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதியுடன் இணக்கப்பாடு எட்டப்பாடு எட்டப்பட்ட நிலையிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை உட்பட சில மாவட்டங்களில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களை விட எந்த அளவுகோலின் அடிப்படையில் அந்த மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன என கேள்வி எழுப்பியுள்ள  அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் டி சொய்சா ஏன் குறிப்பிட்ட வயதினருக்கு குறிப்பிட்ட தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய தீர்மானம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு பைசர் தடுப்பூசியை வழங்கும் பொறுப்பு ஏன் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ள அவர் சுகாதார துறைக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சினோர்பார்ம் மொடேர்னா அஸ்டிராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளை எங்களால் வழங்க முடியுமென்றால் பைசரை வழங்க முடியாத என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் நம்பத்தகுந்த விளக்கத்தை அளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது சுகாதார துறையினருக்கு போதியளவு மருந்துகளை வழங்கவேண்டும் என இணக்கம் ஏற்பட்டது எனினும் இராணுவத்தினருக்கு தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது ஆனால் மருத்துவமனைகளும் பொதுமக்களால் நிர்வகிக்கப்படும் ஏனைய சுகாதார நிலையங்களும் நெருக்கடியான நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். TL

No comments

Powered by Blogger.