Header Ads



முடக்கமா..? கட்டுப்பாடா..?? வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் முக்கிய தீர்மானம்


கொரோனா மற்றும் டெல்டா வைரஸூகளின் தொற்று வேகம் பரவலாக அதிகரித்துள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு, சுகாதார தரப்பினர் உள்ளிட்ட தொற்றொழிப்பில் பங்கேற்றிருக்கும் பிரிவுகளிடமிருந்து தரவுகளை அரசாங்கம் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் நிரம்பியிருக்கின்றனர். இந்நிலையில், பல வைத்தியசாலையில் சாதாரண சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில வைத்தியசாலைகளில் முற்றுமுழுதாக நிறுத்திவைக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றது.

நிலைமை மோசமடைந்து இருப்பதாக வைத்திய தரப்பினரும் ஏனைய பிரிவினரும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும் கொ​விட்-19 தடுப்பு செயலணி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) கூடும்.

இந்தக்கூட்டத்திலேயே அடுத்தக்கட்ட தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.

பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா? நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முடக்கிவிடுவதா? என்பது தொடர்பிலும் முடிவுகள் எட்டப்படும்.

இந்நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய பொதுநிகழ்வுகளுக்கான அனுமதிகள், மாகாணங்களுக்கு இடையிலான பொதுபோக்குவரத்து உள்ளிட்டவையை மீள பரிசீலனைக்கு உட்படுத்துவது குறித்தும், வெள்ளிக்கிழமை கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தமை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, தீர்மானங்கள் எடுக்கப்படுமென அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.