Header Ads



வேதனையை தாங்க முடியாத அமைச்சர் சட்டென பேரினவாதத்திற்கு தாவி, திடீரென முஜிபுரின் மீது பாய்ந்தார்


Mano Ganesan

<சுவாரசிய-கதை-ஒன்று>

நேற்றிரவு (09) ரூபவாஹினியில் கொரோனா பற்றிய காரசார விவாதத்தில்;

"தம்மிக பாணி" என்ற போலி நாட்டு வைத்தியனின் பின்னால் ஓடி.., மந்திரித்த சட்டியை தூக்கி களனி ஆற்றில் போட்டு..,  தடுப்பூசியை வேளைக்கு கொண்டு வராம, தாமதம் செய்து, இன்று மக்களை ஆபத்தில்  போட்டு விட்டீர்களே!... என  நானும், முஜிபுர் ரஃமானும் மாறி, மாறி அடித்து, கொடுத்த வேதனையை, தாங்க முடியாமல், அரசு தரப்பு அமைச்சர் சட்டென "பேரினவாதத்திற்கு" தாவினார். 

"தேசிய வைத்தியம், எங்க பெளத்த மதம் ஆகியவற்றை அவமரியாதை செய்யாதீங்க", என திடீரென முஜிபுரின் மீது பாய்ந்தார். 

"இதென்னடா வம்பா போச்சு" என நான் நண்பன் முஜிபுரை அமைதி காக்க சொல்லிவிட்டு, அமைச்சருக்கு சொன்னேன். 

"அதென்ன திடீர்னு இனமதவாதம் பேசுறீங்க ப்ரதர்? அப்படியே பார்த்தாலும், உங்க நாட்டு வைத்தியன், கெளதம புத்தரின் பெயரை சொல்லலியே. நம்ம காளியம்மனின் பெயரை அல்லவா, விலைபேசி விற்க முயன்றார். ஆகவே அமைச்சரே, அத நாங்க பார்த்துகிறோம். நீங்க ஆவேசப்படாதீங்க...!" என்றேன். 

மேலும் "பஞ்ச்"சாக, "நான் நாளைக்கு போயிருவேன். நீங்க இளைஞர். நீண்டகாலம் வாழனும். ஆனால்,  இப்படி இனவாத பக்கம் போறது எனக்கு ஆச்சரியமா இருக்கே", என்றேன்.  

அந்த இளம் ராஜாங்க அமைச்சர் கண்களில் வெட்கம் தெரிய தலையை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.  

(அப்படியே விட்டாலும், நம்ம கந்தன், கணபதி, சரஸ்வதி, விஷ்ணு, காளி எல்லாமே "பெளத்த" கடவுளர்தான் போலும்.)

No comments

Powered by Blogger.