Header Ads



இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, இரத்தினக்கல்லுக்கு ஜனாதிபதியினால் விசேட விமானம்


இரத்தினப்புரி - பெல்மடுல்ல பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்திற்கு முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதியினால் விசேட விமானம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

510 கிலோகிராம் நிறையுடைய குறித்த இரத்தினக்கல் 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ரூபாவில் இது 2,000 கோடி ரூபா பெறுமதியுடையது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரத்தினக்கல்லின் ஊடாக பாரிய அந்நிய செலாவாணியை ஈட்ட முடியும் என Hiru செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

2 comments:

  1. சீனாவில் இதைவிட பிரமாண்டமான
    கட்கள் எவாள்வோ ஊள்ளண.
    Flightukku kudukkura panam
    Aniyayam. Athu naattu makkalin
    Panam.

    ReplyDelete
  2. More credit to his own account????

    ReplyDelete

Powered by Blogger.