Header Ads



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கையொப்பம் கொண்ட அங்கீகார சான்றிதழ் பெறும் இலங்கையராக சப்றாஸ் தெரிவு


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

அம்பாரை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர்  சப்றாஸ் அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்டுள்ளார் 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கையொப்பம் கொண்ட அங்கீகார சான்றிதழ்  பெறும் இலங்கையின் முதல் தமிழ் பேசும் குடிமகனாக சப்றாஸ் தெரிவு செய்யபட்டுள்ளார்

ஐக்கிய அமெரிக்க U.S state department இனால் வழங்கப்படுகின்ற உலகின் மிகவும் போட்டி வாய்ந்த பாட நெறிகளுள் ஒன்றான Development studies under the Fulbright Humphrey fellowship எனும் பாடநெறிக்கு இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டுச்சென்றுள்ள அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் சப்றாஸ்  மேற்கண்ட கௌரவத்தினை பெற்றுள்ளார். 

ஐக்கிய அமெரிக்காவின் Cornell பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும்  அவர் குறித்த பாடநெறியின் முதல் பகுதியை வெற்றிகரமாக முடித்து கொண்டமைக்காக குறித்த சான்றிதழ்  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.



1 comment:

Powered by Blogger.