Header Ads



இந்தியாவின் தலைசிறந்த கண் மருத்துவ நிபுணர் இஸ்லாத்தை தழுவ காரணமாக அமைந்த திருக்குர்ஆனின் ஒற்றை வாக்கியம்


டாக்டர் முஹம்மது சாதிக் - M.B.B.S., F.R.C.S.,, M.B.A.,

இந்தியாவின் தலைசிறந்த கண் மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் முகமது சாதிக், திருக்குர்ஆனின் ஒற்றை வாக்கியம் ஏற்படுத்திய தாக்கம் இஸ்லாத்தை தழுவ காரணமாக அமைந்தது என்று பெருமிதம் கொள்கிறார்..

மலப்புறம் மாவட்டத்தில் ஆச்சாரமான பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் காலத்திலேயே கடவுள் குறித்த தேடல் அதிகமாகி, பல்வேறு சமயங்கள் கூறும் கடவுள் குறித்த கொள்கைகளை ஆராய்ந்து "தெய்வம் ஒன்று மட்டுமே" எனும் முடிவுக்கு வந்தவர்..

மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவ படிப்புடன் பகவத்கீதையோடு, பிற சமய கிரந்தங்களில் உள்ள கோட்பாடுகளை ஆராய்ந்தவரின் கைகளில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு கிடைத்தது..

சந்தோஷம் வரும் போது மகிழ்ச்சியால் துள்ளாத, சங்கடம் வரும் போது கவலையால் துவளாத நிலையான மனமும், இரண்டும் இறைவனிடம் இருந்து வருகின்றது எனும் எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற பகவத்கீதை வார்த்தைகள்

"நஃப்ஸுல் முத்மஇன்னா" எனும் திருக்குர்ஆன் வசனத்துடன் ஒத்துப்போவது குறித்த நீண்டநாள் ஆய்வுக்கு பின்னர் சத்திய மார்க்கத்தை தழுவியவர்..

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட நேரத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், உறவினர்கள் இவரை மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்க முயன்ற போதும் தனது முயற்சிகளில் உறுதியாக இருந்தவர் டாக்டர் முஹம்மது சாதிக்..

தற்போது பெருந்தல்மன்னா அல்-ஸலாமா கண் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக உள்ள டாக்டர் முகமது சாதிக், ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகள் நடத்திய சாதனைக்கு சொந்தக்காரர்..

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்  கண் மருத்துவம் தொடர்பான கருத்தரங்குகளில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்..

இவரது முயற்சியில் உருவான  பெருந்தல்மன்னா அல்-ஸலாமா கண் மருத்துவ ஆய்வு மையம்,

அல் ஸலாமா ஆர்க்கிடெக்ட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர்..

Colachel Ashes


No comments

Powered by Blogger.