பொன்விழா ஆண்டில் உஸ்தாத் AC அகார் முஹம்மது
நளீமிய்யா ஆரம்பிக்கப்பட்டு அது தனது வெள்ளி விழாவை கொண்டாடும் அன்று பிரதிப் பணிப்பாளராக நளீமிய்யாவின் அறுவடை ஒன்று முதலாவதாக உயர் நிருவாகப் பதவி ஒன்றை உஸ்தாத் ஏ.சீ. அகார் முஹம்மது மூலம் பெற்று பூரிப்படைந்தது.
அதன் பின்னர் மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் மரணத்தின் பின்னர் நளீமிய்யாவின் முதல்வர் என்ற நாமம் வீசி இன்றுடன் ஐம்பதாவது வருடத்தில் கால் பதிக்கிறார்.
الحمد لله
இவ்வாறு நளீமிய்யா என்ற நிறுவனத்துடன் மிக நீண்ட கால உறவு கொண்டு தன்னை அர்ப்பணித்த உஸ்தாத் ஏ.சீ. அகார் முஹம்மது அவர்களுக்கு பொன்விழா காணும் இன்றைய நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரக்கமுள்ள ரஹ்மானே!
உஸ்தாத் ஏ.சீ.அகார் முஹம்மது அவர்களுக்கு பூரண உள, உடல் ஆரோக்கியத்தை வழங்கி அவர் மூலம் இன்னுமின்னும் சமூகமும், தேசமும், விதேசமும் பல நூறு நன்மைகள் அடைய பேருதவி செய்வாயாக.
20/07/2025.
Beruwala Nanban
Post a Comment