July 31, 2021

இல்யாஸ் ஹாஜியாரின் பெயரை எப்படிச் சொல்வது..? இந்த வஞ்சக சூழ்ச்சிதான் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...!


கடைசியில் தர்மமே வெல்லும்!

நிலையான தர்மத்தின் பலன்கள் மரணத்தின் பின்னரும் வந்து சேரும்.

இதனை ஸதகதுல் ஜாரியா என்று இஸ்லாம் சொல்கிறது.

வீட்டுக்கு முன்னால் செல்கிறவர்களுக்கு தாக சாந்திக்காக ஒரு நீர்க்குடத்தையோ அல்லது குழாய்த்தண்ணீர் வசதியையோ செய்து வைத்தால் அதுவும் ஸதகதுல் ஜாரியாவில் அடங்கும்.

பஸ்ஸிற்காக மக்கள் காத்து நிற்கும் இடத்தில் ஒரு நிழல்தரும் தரிப்பிடத்தை அமைத்துக்கொடுத்தால் அதுவும் நிலையான தர்மத்தில் வரும்.

இங்கே பயன்பெறுகின்றவர்கள் ‘முஸ்லிம்களாக’ இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.

மனிதர்கள் பயன்பெற்றாலே போதும்.

சில வேளை விலங்கினங்களுக்கான உதவிகளும் கூட நிலையான தர்மத்தில் வந்து விடும்.

மெலிபன் கார்மன்ட்ஸ் உரிமையாளர் இல்யாஸ் ஹாஜியார் அன்பளிப்பு செய்த மருத்துவ கட்டடம் நேற்று தேசத்தின் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

இல்யாஸ் ஹாஜியாரும் அங்கே இருந்தார்.

இதனை எத்தனை ஊடகங்கள் செய்திப்படுத்தின என்ற கேள்விக்கு ஏமாற்றமான பதில்களே எஞ்சி நிற்கின்றன.

பல ஊடகங்கள் வேறொரு திட்டமிட்ட வேலையில் அல்லவா பிஸியாக இருக்கிறார்கள்!

அவை ஒரு குறித்த சமூகத்தை படு மோசமாக சித்தரிக்கும் ஊத்தை அரசியலை கையில் ஏந்தியிருக்கும் போது, எப்படி அதே சமூகத்தை சேர்ந்த இல்யாஸ் ஹாஜியாரின் பெயரை சொல்வது? அவருக்கு எப்படி ஊடக வெளிச்சம் கொடுப்பது?

இந்த வஞ்சக சூழ்ச்சிதானடா உங்களையெல்லாம் அங்குலம் கூட வளரவிடாமல் இன்னும் 70 வருடங்கள் பின்னே வைத்திருக்கிறது...

அதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இல்யாஸ் ஹாஜியார் பெருமைக்கு மா இடிப்பவர் அல்ல. அவர் மறுமைக்கு மரம் விதைப்பவர்!

பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு ஒரு பிரமாண்டமான கட்டடத்தை கட்டி கொடுக்க முன்வந்த போது அவர் முதல் வைத்த கோரிக்கை என்னவென்றால் ‘எனது பெயரை விசயம் நடந்து முடியும் வரை வெளியில் சொல்லக்கூடாது’!

மரவள்ளிக்கிழங்கிலேயே விளம்பரம் தேடும் அற்பர்கள் வாழும் இந்த உலகில், இல்யாஸ் ஹாஜியாரை போன்றவர்களின் உயரம் எங்கே இருக்கிறது.

முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கட்டடம் கட்டி முடியும் வரை பெற்றோர்களாகிய நாம் வியப்பின் ஆச்சரியக்குறியிலேயே இருந்தோம்.

கட்டடத்திறப்பு விழா அன்றுதான் the Man behind the scene வெளியில் தெரிந்தார்!

இதுதான் நிரந்தர தர்மத்தின் பண்பு.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பேராயரிடம் நிதி உதவி வழங்கியது, நேற்றைய வைத்தியசாலை கட்டட தொகுதி, முஸ்லிம் மகளிர் கல்லூரிகட்டிடம் என வெளித்தெரிந்த தர்மங்களை விட இன்னும் பல தெரியாமலேயே அவரால் நடாத்தப்படுகின்றன.

இவரைப்போல அல்லது இவரை விட செல்வங்கொழுத்த பலர் கொசுவுக்கு கூட கை அசைக்க தயங்கும் நிலையில் எந்த வித உலகப்பயனையும் எதிர்பாராது வாரி வழங்கும் இவரைப்போன்றோரின் தாராள பிரபுத்தனம் நம்மெல்லோருக்கும் பெரும் பாடமாகும்.

எல்லாம் வல்ல இறைவன் இல்யாஸ் ஹாஜியாரின் நல்லறங்களை பொருந்திக்கொண்டு மேலான சுவனத்தில் நித்திய இடத்தை வழங்கிட பிரார்த்திப்போம்.

-Mujeeb Ibrahim-


5 கருத்துரைகள்:

Thank you for bringing facts like these..even though medias are hiding we must find ways to make awareness about these services mainly to major community..not for bosting purposes...it is very vital to make awareness at this precent situation in our country..allah knows better..Allah bless people likIlyaas hajiyar

Masha allah may allah grant you jannatul firdous and my heartful wishes for your long healthy life.

எந்த ஹாஜியார் என்றாலும் சிங்கள சூழலில் வளர்ந்தால் அல்லது வாழ்ந்தால் இஸ்லாமிய மதத்தின் உண்மை அதன் தாட்பரியங்கள் விளங்காது.கூட்டி களித்தால் இவரும் சிங்களவறதான். இஸ்லாத்துக்கு இவர் என்ன செய்துள்ளார்?

Why JM published this comment?
Muslim not only help muslims but also help mankind.
This Hajiyar did that. Its great.

This money should be given to needy people in Sri Lanka

Post a Comment