Header Ads



பெனால்டிகளை தவறவிட்ட 3 கறுப்பினத்தவர்கள், இங்கிலாந்து வீரர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் - பிரதமர் கடும் கண்டனம்


யூரோ2020 கால்பந்து தொடர்  இறுதிப்போட்டியில்  பெனால்டி  ஷூட்அவுட்களை தவறவிட்ட இங்கிலாந்து அணிவீரர்கள் சமூக ஊடகங்களில் கடும் நிறவெறி தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தின் 19வயது வீரர் புக்காயோ சக்கா தவறவிட்ட பெனால்டி  ஷூட் அவுட் காரணமாக இத்தாலியின் கரங்களிற்கு கிண்ணம் சென்றதுடன்  1966க்கு பின்னர் முதலாவது சர்வதேச கிண்ணத்தை கைப்பற்றும் இங்கிலாந்தின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

இங்கிலாந்து அணியின் மூன்று வீரர்கள் பெனால்டி  ஷூட்அவுட்களை தவறவிட்டனர்- மூவரும் கறுப்பினத்தவர்கள் என்பதால் அவர்களை இலக்குவைத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தாக்கி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் சமூக ஊடகங்களில் நிந்தனைக்கு உட்படுத்தப்படுவதை பிரதமர் பொறிஸ்ஜோன்சன் கடுமையாக கண்டித்துள்ளார் ரசிகர்களின் இந்த நடவடிக்கை திகைப்படையவைக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியினர் வீரர்கள் என பாராட்டப்படவேண்டியவர்கள் - சமூக ஊடகங்களில் தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியவர்கள் இல்லை என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான திகைப்பூட்டும் துஸ்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் வெட்கப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இனவெறிக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் இங்கிலாந்து வீரர்கள் போட்டிகளிற்கு முன்னதாக முழங்காலில் அமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.