Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியாவில் கொவிட் 19 தடுப்பூசி – சமூகத்தின் ஒத்துழைப்பை கோரி யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் பகிரங்க அழைப்பு


யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) 2021.07.06 யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த நிகழ்வில் பின்வரும் கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் தமக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

1. ஜே 81 – கோட்டை 

2. ஜே 83 – கொட்டடி 

3. ஜே 84 – நாவாந்துறை தெற்கு 

4. ஜே 85 -  நாவாந்துறை வடக்கு 

5. ஜே 86 – சோனகதெரு தெற்கு 

6. ஜே 87 – சோனகதெரு வடக்கு 

7. ஜே 88 – புதிய சோனகதெரு 

எனவே எமது சோனகதெரு வடக்கு மற்றும் சோனகதெரு தெற்கைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகமும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என இத்தால் பகிரங்க அழைப்பு விடுகின்றோம். 

கொவிட் - 19 தாக்கத்திலிருந்து முன்பாதுகாப்பு நடவடிக்கையாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளுக்கு ஒவ்வொரு கிராமங்களிலும் முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டுவருவதை நாம் அறிந்துள்ளோம். அந்த வகையில் உயிர் காக்கும் உண்ணத பணிக்காக தியாகத்துடன் பணியாற்றிவரும் அரச அதிகாரிகளுக்கும் - மருத்துவத்துறையினருக்கும் முழுமையான பங்களிப்புக்களை வழங்க அனைவரும் முன்வர வேண்டும். 

எனவே நாளைய தினம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு எமது சோனகதெரு பகுதியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யுமாறு யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர் கழகம் ஆகிய நாம் சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்த்து இத்தால் பகிரங்க அழைப்பு விடுகின்றோம். 

என்.எம்.அப்துல்லாஹ் 

தலைவர் 

யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் 


No comments

Powered by Blogger.