Header Ads



கடல் உணவுகளை உண்ண பயப்படாதீர்கள், நீர்கொழும்பு களப்பில் தொழில் செய்யலாம் - மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் - இராஜாங்க அமைச்சர்


Ismathul Rahuman -

கடல் உணவுகளை உண்பதனால் மனிதரை பாதிக்கும் என விஞ்ஞானபூர்வமாக நிறுபிக்கப்படவில்லை. மீன் சாப்பிட மக்கள் பயப்பட வேண்டாம்.மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை கொள்வனவு செய்ய அரசு ஏற்பாடுசெய்யும். நீர்கொழும்பு களப்பில் மீன்பிடி தொழிக்கு இன்று (12)முதல் அனுமதி வழங்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேக்கர மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.

கப்பல் தீபற்றியதால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக மீனவ சங்க பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்த, இராஜாங்க அமைச்சர்களான காஞ்சன விஜயசேக்கர, நிமல் லான்ஸா, நகர பிதா தயார

லான்ஸா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

ஊடகங்களுக்கு இதில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.

இராஜாங்க அமைச்சர் காஞ்சன தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கப்பல் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இருப்பதால் சடடமா அதிபரின் ஆலோசனைகினங்கவே ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.அதற்கான மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிகையில்

முழு இலங்கைப் பரப்பிலும் மீன்பிடிக்கத் தடை என்றே கூறுகின்றனர். அப்படியில்லை. ஒரு பகுதியே தடை செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களின் உய்ருக்கும் மீன்பிடி வள்ளங்களுக்கும், உபகரணங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதனாலேயே அவ்வலயத்தை தடைசெய்தோம்.

நீர்கொழும்பு களப்பில் இன்று(12) முதல் மீன்பிடி தொழிலில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நஷ்டஈட்டினை பெற்றுக்கொள்ளவதற்காக எமது மதிப்பீட்டினை முன் வைத்துள்ளோம். கடந்த 23ம் திகதி முதல் 3ம் திகதி வரை ஆரம்ப 10 பெண்களுக்கான நஷ்டஈடு தொடர்பாக அறிவித்துள்ளோம். ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக வாராவாரம் சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறு எமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சம்பூர்ணமான நஷ்டஈட்டை கோரியுள்ளோம்.வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதனால் நாம் சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளது தொகை எவ்வளவு என்றோ, மீனவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு என்றோ ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளோம்.

மீனவர்களுக்கு ஆரம்ப கட்டமாக 5000 ரூபா வழங்கப்படும்.

நாம் மேற்கொண்ட எந்தவொறு பரிசோதனையிலும் விஞ்ஞானபூர்வமாக மீன் உண்ணக் கூடாது எனத் தெரிவிக்கபடவில்லை. எனவே மீன் சாப்பிட பயப்படத் தேவையில்லை. மனிதருக்கு தேவையான புரோட்டினின் 60 சத வீதமானதை கடல்உணவு மூலமே கிடைக்கின்றன. தடுக்கப்பட்ட பிரதேசங்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்.

விற்பனை செய்யமுடியாத மீன்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். பேலியகொடை மீன்சந்தையிலும், நாட்டிலுள்ள 22 மீன்பிடித் துறைமுகங்கள் ஊடாகவும்,கொள்ளவும் செய்யபடும். அப்படியில்லையென்றால் மீனவர்கள் கூறுமிடத்திற்கு வந்து வாங்குவதற்குத் தயாராகவுள்ளோம். நாம் நேற்றும் பேலியகொடையில் 2000 கிலோ மீனும் பேருவளையில் 9000 கிலோ மீனையும் வாங்கினோம். சில்லரை மீன் விற்பனை நிலையங்களே மூடப்பட்டுள்ளன.மொத்த விற்பனை நிலையங்கள் திறந்துள்ளன. நடமாடும் வியாபாரிகளுக்கு மீன் விற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் வீடுவிடாகச் சென்று மீன்களை விற்பதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளமுடியும்.

மீனவர்களின் பிரச்சிணைகள் தொடர்பாக மேலும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பாக அமைச்சருடன் இணைந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர் எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.