Header Ads



எனக்கும் SJB க்கும் பிரச்சினை எதுவும் இல்லை, ஜனாதிபதியின் உரையினால் நாட்டில் 3 முக்கிய பிரச்சினைகள் புலனாகிறது - சம்பிக


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக ரணவக்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

சமீபத்தில், ஜனாதிபதி 69 நிமிடங்கள் மக்களுக்கு உரையாற்றினார்.அவருடைய உரையினால் நாட்டில் மூன்று முக்கிய பிரச்சினைகள் எழுந்தன என்பது புலனாகிறது.

ஆனால் தற்போது நிலவும் மூன்று முக்கிய பிரச்சினைகளில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அவர் தனது உரையில் கூறவில்லை. இந்தியாவின் டெல்டா உருமாரிய வைரஸ் பரவல் மற்றும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இந்த நாட்டிற்கு அத்தியாவசிய எரிபொருளை இறக்குமதி செய்ய டொலர்கள் இல்லை. நாடு பாரிய வக்குரோத்து நிலையை பெருளாதாரத்தில் அடைந்துள்ளமை இரகசியமல்ல.வெளிநாட்டு கடண்களை அடைக்கும் பட்டியல்கள் வெளிப்படைத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் நாட்டில் அரிசி பற்றாக்குறை இருப்பதால் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவும் நிறுத்தப்பட்டது டொலர்கள் பற்றாக்குறைக்கு தான் காரணம்.நாங்கள் இதைப் பற்றி முன்பே கூறியுள்ளோம்.

எரிபொருள் விலை உயர்வால் நம் நாட்டு மக்கள் வாழ்க்கைச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் உயர்ந்துள்ளது.இந்த நாட்டில் 4 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். நாட்டில் 7%  மக்களே வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்கள்.

இன்று, நாடு முழுவதும் விவசாயிகள் உரங்கள் மற்றும் விதைகள் மற்றும் பூச்சிநாசினிகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் நாட்டில் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை உள்ளது. இந்த கேள்விக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை.முழு நாட்டிலும், உழைக்கும் மக்கள் உட்பட, சகலரும் இன்று வேதனையுடன் காத்திருந்தார் ஜனாதிபதியின் உரையில் தீர்வு கிடைக்கும் என ஆனால் அது குறித்து எதுவும் பேசவில்லை. நாட்டின் மதிப்புமிக்க சொத்துக்கள் எவ்வாறு விற்கப்படுகின்றன என்பது குறித்து ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.25000 வீடுகள் கட்டப்பட்டு சம்பூர்ணமடைந்தாக கூறினார்,அது முற்றிலுமான பெய்.

400 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார்.எமது நல்லாட்சி  அரசாங்கம் 750 நகர்ப்புற வீடுகளை கட்டியது, இப்போது அது 50,000 கட்டப்படுவதாக கூறினார். 200,000 வீடுகள் கட்டப்படும் என்று அவர் கூறினார். இது போன்ற பல கதைகளை அவர் கூறினார்.இவை அனைத்தும் பிழையான தரவுகள்.2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் வரவு செலவு திட்டங்களின் போது வினவினோம்.இது முற்றிலும் தவரான தரவுகள்.நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தி நகைச்சுவைகளை ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் 10,000 பாடசாலைகளுக்கு  ஃபைபர் ஒளியியல் வழங்கப்பட்டுள்ளது என்றும்,இதனால் இணையவழி கல்வி சிறப்பாக நடைபெறுகிறது என்றும் ஜனாதுபதி கூறினார்.ஆனால் இதனால் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் குறித்து குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு குழந்தைகளின் வலி தெரியும், ஏனெனில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர்களுக்கு அவருக்கு அந்த வலி இல்லை, ஏனெனில் ராஜபக்ஷ குடும்பத்தில் எந்த குழந்தைக்கும் இலங்கையில் உயர் கல்வியே அல்லது பாடசாலைக் கல்வியே வழங்கப்பட்டவர்கள் இல்லை. இந்த கல்வி தொடர்பான நாட்டின் தரவு குறித்து நாட்டிற்கும் உலகிற்கும் பெரும் சந்தேகம் உள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகின்றன. பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்.சௌபாக்கியத்தின் தொலைநோக்குக்கு இதைவரை என்ன நடந்துள்ளது என வினவுகிறேன்.ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியாக மௌலவி ஒருவர்  தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.அவரைக் கைது செய்தது எங்களுடைய நல்லாட்சி அரசாங்கமே,நாங்கள் கைது செய்ததற்கு பிறகு வேறு எவரும் இது வரை கைது செய்யப்பவில்லை.அன்று பல அரசியல் தலைவர்களை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று புதிதாக எவரையும் கைது செய்யவில்லை.மத்திய வங்கியின் மேசடியோடு தொடர்பான நபரை கைது ஆட்சிக்கு வந்ததும் கைது செய்வோம் என்றார்,இன்று ஒரு சந்தமேனும் இல்லை. இன்று அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். அப்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டிய அவர் இன்று ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். ஒரு நாடு ஒரு சட்டம் ஒன்று என்று கூறினார். இது இன்று சர்வதேச நகைச்சுவையாக மாறியுள்ளது.அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று அவர் கூறினார்.இது இன்று நாட்டிலும் ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது .அவர் ஒடுக்கப்பட்டவர்களின் நிவாரணம் பற்றி பேசவில்லை. நாங்கள் பாதுகாத்துள்ள தேசிய சொத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணெய், சாலைகள், மதிப்புமிக்க வணிக நிலங்களை விற்பனை செய்வதன் மூலம் நமது எரிசக்தி அமைப்பை அழித்து வருகிறது. இராணுவ தலைமையகம் வெளியே எடுக்கப்பட்டு விற்கப்பட்டது.நான் நாட்டைப் பற்றி நினைக்கும் ஒரு மனிதன், இதைக் கேட்கும்போது உண்மையில் கண்ணீரை நோக்கி நகர்கிறான்.

மின் வலு செயற்திட்டங்கள் நாங்கள் உருவாக்கியவை அதனை வைத்து தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் நலன் தேடுகின்றனர்.

குழந்தைகளின் இணையவழி கற்றல் செயற்பாடு குறித்து எதுவும் கூறவில்லை.லொஸ் ஏஞ்சலிஸில் உள்ளவர்களுக்கு இங்குள்ள குழந்தைகளின் ஒரு பிரச்சினணை,பிரச்சிணையாக தெரியாது.இங்குள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு இந்த நாட்களில் ஏற்ப்ட்டுள்ள சிக்கல் ஏராளம்.தனது குழந்தைகளுக்காக வலியைச் சுமக்குன்றனர்.தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பித்து இரவு பகலாக  ஐந்து மணி நேரம் குழந்தைகளுக்கு கற்பிக்க ஏன் முடியாது.அது குறித்தை எதுவும் தனது உரையில் கூறவில்லை.இவ்வாறு மேற்கொண்டால் குழந்தைகள் மரங்கள் மற்றும் பாறைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்படாது .இப்போது ஸ்மார்ட் போன் இல்லை என்றால் கற்றுக்கொள்ள வழி இல்லை, டேட்டா இல்லை என்றால் கற்றுக்கொள்ள வழி இல்லை. ஜனாதிபதி அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

எனக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே ஒரு பிரச்சினை இருப்பதாக சமீபத்தில் பேச்சு வந்தது. இதுபோன்ற பிரச்சினை எதுவும் இல்லை. ஊடகங்கள் பரப்பிய வதந்திகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டியதில்லை.ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சி மூலம் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம், அதன்படி செயல்பட வேண்டிய ஒழுக்கம் எங்களிடம் உள்ளது.

அரசாங்கம் இரகசிய பொலிஸ் போல் செயல்படும் விதத்தால் நாளுக்கு நாள் அரசாங்கத்தின் பிம்பம் மோசமடைந்து வருகிறது,இவ்வாறு தனது அரசியல் எதிரிகளை அடக்குவது பயனற்றது.உலகலாவிய ரீதியாக மற்றும் நாட்டிலும் அரசாங்கம் நாளுக்கு நாள் ஓரங்கட்டப்பட்டு வருகிறது.நீதி இல்லாத நாட்டில் குழந்தைகள் வாழத் தயாராக இல்லை. சமீபத்திய ஆங்கில மொழி புலமைத்துவ பரீட்சையை ஏராளமான படித்த குழந்தைகளால் எழுதப்பட்டது.இங்கு வாழப்பிரியப்படாத நிலையை காட்டுகிறது.இது இந்த நாட்டை மனித பாலைவனமாக்கப் போகிறது. இது ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல.

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்படுவது நாட்டின் சட்டத்தின்படி அல்ல, இந்த நாட்டில் நீதிமன்ற அவமதிப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் இல்லை. நீதிபதிகளின் விருப்பப்படியே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

பசில் ராஜபக்சே வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார் என்று கூறுகிறார்கள். அவர் முந்தைய அரசாங்கத்தில் இருந்தார் அல்லவா, என்ன செய்ய முடிந்தது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் நிதி ஒழுக்கத்துடன் அமைச்சுகளில் பணியாற்றுவதில்லை. பசில் ராஜபக்ஷ வந்தாலும் அவர் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியது போன்றே நாட்டின் பெருளாதாரத்தை கொண்டு செல்வார்.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிதி அமைச்சகம் தோல்வி கண்டுள்ளது.

ராஜபக்சர்கள் இது இங்கிலாந்தின் அரச வீடு என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல. இது ஒரு ஜனநாயக நாடு என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.