Header Ads



கொரோனா மரணங்கள் பற்றிய தவறான அறிக்கையில், பிரதானியை இடமாற்றிய விவகாரத்தில் 2 பெண் அமைச்சர்களின் பிரதிபலிப்பு


கொரோனா மரணங்கள் குறித்த தவறான அறிக்கையே, தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீரவின் இடமாற்றத்துக்கு காரணமென, சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தொற்று நோய்ப் பிரிவின் பிரதானி சுதத் சமரவீர, டெங்கு நோய் பிரிவுக்கு திடீரென இடமாற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், 101 கொரோனா மரணங்கள் ஒரே நாளில் பதிவாகியதாக தெரிவிக்கப்படும் விடயத்தை ஆரோய்ந்த போது, ஜனவரி, பெப்ரவரி மாதம் பதிவான மரணங்களையும் சேர்த்து ஒரே நாளில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே அரசாங்கமும் சுகாதார தரப்பும் சில தீர்மானங்களை எடுக்கின்றன. எனவே, சரியான தகவல்களை வழங்கும் பொறுப்பிலிருந்து விலகியமை பாரிய குற்றமாகும் என்றார்.

இது சதியெனக் கூறப்படுகின்றதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

“இது சதியா அல்லது விதியா எனக் கூறமுடியாது. ஏனெனில் நாட்டை தவறாக வழிநடத்தும்

செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது” என்றார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம்

ஊடகவியலாளர்கள் வினவிய போது, சிரித்தவாறே பதில் எதுவும் கூறாமல் தனது வாகனத்தில்

ஏறிச் சென்றுவிட்டார்.

1 comment:

Powered by Blogger.