Header Ads



முஸ்லிம் சமூகத்தின் தைரியமான, தலைவனை இழந்துள்ளோம் - பாயிசின் மறைவுக்கு JMC - I அனுதாபம்

"இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்"

 மக்களின் மனங்களை வென்ற நாயகன் தலைவர் K.A.பாயிஸ் அவர்களது இழப்பு புத்தள மண்ணுக்கும் மாத்திரமின்றி யாழ்பாணம் மற்றும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்- 


சகோதரர் தலைவர் K.A.B.என்று அன்புடன் ஆழைக்கப்படும் பாயிஸ் அவர்களது திடீர் மறைவு செய்தியினை கேட்டு எங்கள் உள்ளங்கள் ஆழ்ந்த கவலையில் மூழ்கிக்கிடக்கிறது.

1990 ல் வட மாகண முஸ்லிம்கள் இடம்பெயர்க்கப் பட்டு வந்த போது  சந்தித்த பாரளுமன்ற தேர்தலில் யாழ்பாண மாவட்டத்தில் எம் சமூகம் சார்பாக கலமிரங்கிய டாக்டர் இலியாஸ் உடன்  பக்கபலமாக இருந்து அவருடன் சேர்ந்து   அரசியல் பயணத்தில் கால்பதித்த போது ஆரம்பமாகிய எமக்கும் அவருக்குமான உறவானது மிக நீண்ட வரலாற்றினை கொண்டதாக அமைந்திருந்தது , அன்று தொடக்கம் நேற்று வரை எம்மக்களுக்கான தலைவனாகவும், பாதுகாவலனாகவும் ,நண்பனாகவும் எப்போதும் எமக்கு பக்கபலமாகவும்எம்  சமூகத்தின் மீது அதீத பற்றினை கொண்ட ஒருவராகவும் , அதனை அக்கறையுடன் வெளிப்படுத்தி வந்த ஒருவராகவுமே அவர் திகழ்ந்து வந்துள்ளார்.
எம் சமூகம் மீதான அவரது கரிசனையும், அக்கறையும் அன்பும் அர்ப்பணிப்பும் சொல்லி முடிக்க முடியா தொடர்கதை அவ்வாறான ஒரு நல்ல மாமனிதனை நாம் இன்று இழந்திருக்கிறோம்சமூகம் சார்ந்த விடயங்களிலே துணிவுடன் தோள் கொடுத்து செயலாற்றும் ஒரு செயல் வீரன் , எத்தகைய சவால்கள் பிரச்சனைகள் வந்தாலும் துணிவுடன் செயலாற்றும் ஒரு நல்ல சமூக உணர்வாளனை நாம் இழந்திருக்கிறோம்.

 
முஸ்லிம் சமூகத்துக்காகவும் , புத்தள மண்ணிற்காகவும் தன்னை அர்ப்பணித்து எமக்கான காவலானாகவும் செயலாற்றிய தலைவர் மர்ஹும் பாயிஸ் அவர்களது பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு மேலான சுவனபதியை அவருக்கு பரிசாக வழங்கிட வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உளமாற இறைஞ்சுவதோடு  , அவரது இழப்பினால் துயரமும் கவலையும் அடைந்திருக்கும் அவரின் குடும்ப உறவுகள் , நண்பர்கள் , அவரது நேசத்திற்கான ஆதரவாளர்கள் என அனைவரோடும் யாழ்பாண சமூகம் சார்பாக எமது கவலையை துன்பத்தை பகிர்வதோடு , அனைவருக்குமாய் உள்ளம் உருகி பிரார்த்திக்கிறோம். ஆமீன் 

சர்வதேச யாழ்பாண முஸ்லிம் சமூகம் JMC International

1 comment:

  1. அநீதிக்குத் தப்பி அனாதரவாக வந்த யாழ்பாணம் மற்றும் வடபகுதி முஸ்லிம்களுக்கு ஆதரவாக கை கொடுத்த நாயகன் நினைவை பணிகின்றேன்.புத்தளத்துக்கே நிழலான ஆலமரம் சாய்ந்த சேதியில் துயருறுகிறேன். பெருமதிப்புக்குரிய பாயிஸ், வடபகுதி முஸ்லிம்களதும் அவர்களது தமிழ் நண்பர்களதும் நினைவில் என்றும் வாழ்வார்.

    ReplyDelete

Powered by Blogger.