Header Ads



ஊடகவியலாளர் சந்திப்பில் Dr ராஜித தெரிவித்த கருத்துக்கள்


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

இலங்கையில் உள்ள பல்வேறு மருத்துவ சங்கங்கள் நாட்டின் கடுமையான கொரோனா ஆபத்து குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளன. ஆனால் அதன் பிரகாரம் ஜனாதிபதியால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, பி.சி.ஆர் பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட பரிசோதனை மேற்கொள்ளாத மக்களிலிருந்து அதிகமாக இருக்கலாம் என்று மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் சகல இடங்களிலும் பரவல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.கோவிட் நோயாளிகள் மற்றும் ஏனைய இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கோவிட் மட்டுமல்ல, பிற நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையும்  அன்மைய காலத்தில் அதிகரித்துள்ளது.ஒக்டோபர் 20 இல் பிரப்பித்த லொக்டவுன் எதிர்பார்த்த பிரதிபலனை சுகாதர தரப்பிற்கு வழங்கவில்லை.

இன்று மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன், அவசர படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். பரவலாக தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.இதைக் கட்டுப்படுத்த பயணத்தடைக்கு பதிலாக ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டும் நிலைமை நாளுக்கு நாள் உணர்த்திவருகிறது.

தடுப்பூசியை மட்டும் கொடுப்பதன் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மருந்து சங்க உறுப்பினர் வைத்தியர் பத்மா குணரத்ன தேசிய ஔதட கட்டுப்பாட்டு சபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த விடயத்தை ஜனாதிபதிக்கும் அறிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஔதட கட்டுப்பாட்டு சபையின் தலைவர் விரைவில் ஜனாதிபதியிடம் தெரிவிக்க ஜனாதிபதி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆனால் இராணுவ அதிகாரிகள்,வியத்மக தரப்பினர்களிடம் மட்டுமே இந்த அவரால் சந்திக்க முடியுமாகவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத் தலைவர் மொஹான் சமரநாயக்க அண்மையில் பயணத் தடை விதிக்கப்பட்டது ஆடைத் தொழில் துறையினருக்கு பொருந்தாது என்று கூறியிருந்தார், ஆனால் கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஏராளமான நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார தரப்பு தரவுகளுடன் தெரிவித்துள்ளது.மொஹான் சமரநாயக்க அரச தலைவர்களின் வீட்டிற்குள்  இருந்து கொண்டு இதுபோன்ற முடிவுகளை எடுப்பது தவறு என்று கூறுகிறோம்.களநிலவரங்களின் படி தீர்வுகளை எட்டுங்கள்.

தற்போது கண்டி மாவட்டத்தில் பி.சி.ஆர் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, போதுமான வசதிகள் இல்லாததால் நுவரெலிய மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் கட்டுப்படுத்தலின் கீழ் நம் நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  அமைச்சர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, கோவிட் விடயங்களை கையாள துறை சார்ந்த நிபுனர்களை ஒதுக்கி விட்டு அரசியல் நியமனங்களை வழங்கி இஷ்டத்திற்கு செயற்படுத்துகிறார். உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த இலங்கைக்கான சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணரான வைத்தியர் பாலித அபேயகோணையும் இந்த செயற்ப்பாட்டிலிருந்து அரசாங்கம் நீக்கியது.இப்போது, ​​அமைச்சர் சுதர்ஷணி மட்டுமே தான் அவர் கற்றுக்கொண்டதை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறார். 

உலகிலுள்ள 6,7 வகையான உருமாறிய வைரஸ்கள் இலங்கையிலுள்ளதாக மருத்துவ சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

வைத்தியர் உதய கம்பன்பில ஒக்ஸ்போர்டு தடுப்பூசியுடன் பிரிதொரு வகை தடுப்பூசியையும் கலக்க முடியும் என்று கூறியுள்ளார்,பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியவர் போன்று தடுப்பூசி கலக்க முடியும் என்று கம்மன்பில கூறுகிறார். இதுபோன்ற அமைச்சர்களைக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. 

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் 75 ஷரத்துக்களில் 25 ஷரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதை நிரூபித்துள்ளன.இவ்வாறான கூடிய ஷரத்துக்கள் நிராகரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவே வரலாற்றில் முதல் தடவை.

ஆம்புலன்ஸ்களை இறக்குமதி செய்ய பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியில் நாங்கள் 297 ஆம்புலன்ஸ்களை இலவசமாகக் கொண்டு வந்தோம். இந்த அரசாங்கம் ஏராளமான பணத்தை இலவசமாக மோசடி செய்துள்ளது. ஏராளமான பணத்தை மோசடி செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது. போதுமான பணம் இருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் தற்பெருமை காட்டுகிறார். ஆனால் மறுபுறம் அமைச்சர் சுதர்ஷனி நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் உதவி கேட்கிறார். தனியார் துறையிலிருந்து உதவிகளை நாடியுள்ளார். அப்போது சுகாதாரத் துறையில் எந்த நல்ல வளர்ச்சியும் ஏற்படவில்லை என்பதயே இது புலப்படுத்துகிறது.நல்லாட்சி அரசாங்க காலத்திற்கு பிறகு சுகாதாரத் துறை சக்திப்படவில்லை.அவர்கள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்ததற்காக மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். அரசியல் பயண முடிவுகளால் ஒரு தொற்றுநோயை ஒழிக்க முடியாது என்றார்.

No comments

Powered by Blogger.