Header Ads



சகல சவால்களையும் முறியடித்து மக்களுடன், பயணிப்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது - அமெரிக்காவிடம் கூறினார் பிரதமர்


எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே பிரதமர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கோவிட் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் எனப் பல சவால்கள் எம்மைச் சூழ்ந்துள்ளன.

அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் நாட்டின் கோவிட் தொற்று நிலைமை மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்குப் பிரதமர் விளக்கியுள்ளதாக தெரியவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. மேல் உள்ள எப்படி நாம் நம்புவது என்பது பொதுமக்களாகிய எமது பெரிய யோசனை.

    ReplyDelete
  2. மேல் உள்ள எப்படி நாம் நம்புவது என்பது பொதுமக்களாகிய எமது பெரிய யோசனை.

    ReplyDelete

Powered by Blogger.