Header Ads



நான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால்...?


நான் சிறைக்கு செல்வதற்கு முன்பு, யாராவது ஒருவேளை இஸ்லாத்தை எனக்கு எடுத்துரைத்திருந்தால் அதை உட்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

காரணம், எனது வாழ்க்கை முழுவதும் மதுவும், மாதுவும் உள்ளடங்கிய சந்தோஷத்தில் மூழ்கி கழிந்த காலங்களாக அவை இருந்தது..

ஆனால் நான் சிறைக்குள் நுழைந்த

அந்த நொடியே எனது உள்ளம் உடைந்து போனது. 

ஒருவகை வெறுப்பும் தனிமைப்படுத்தலும் என்னுள் புலரத்துவங்கியது. மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

அத்தகைய சூழலில் இஸ்லாம் அல்லாமல் வேறு எதுவும் என்னை மீட்டெடுக்க துணையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

சிறைக்குள் பிரார்த்தனை செய்ய துவங்கினேன். ஒவ்வொரு நேர பிரார்த்தனைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடினங்களிலிருந்து மீண்டு வருவதை உணர்ந்தேன்.

இப்போது ஒரு முஸ்லிம் என்ற நிலையில் நான் முழுமையான வாழ்க்கை நெறியை பின்பற்றுபவனாக உள்ளேன்..

வழக்கின் தீர்ப்பு வேளையில் முந்தைய சொகுசு வாழ்க்கையா, சிறைத்தண்டனையா எனும் கேள்வி எழுந்திருந்தால் சிறை வாழ்க்கையையே தேர்ந்தெடுத்திருப்பேன்...

முன்னாள் குத்துச்சண்டை வீரர்

#மைக்டைசன்...

Colachel Azheem

2 comments:

  1. "(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!"
    (அல்குர்ஆன் : 13:28)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.