Header Ads



எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு, பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது - பந்துல


எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -21- இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய கொவிட் பரவல் நிலைமையில், சரக்கு போக்குவரத்து இடம்பெறாமையினால் ஏற்பட்டுள்ள கொள்கலன் பற்றாக்குறையின் காரணமாக, சரக்கு போக்குவரத்துக்கான செலவும் சர்வதேச ரீதியில் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Because your givt received big cash from china.after3months this cash will finished.ok

    ReplyDelete
  2. இப்படியான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்வது மிகவும் நன்று. அசாத்தியமான காலங்களில் பொருள்களின் விலைகள் கூடுவதும் ஏனைய காலங்களில் சமநிலையில் இருப்பதும் சாதாரணமான விடயங்கள். நெருக்கடியான காலங்களில் விற்பனையாளர்கள் பொருள்களை நட்டத்திற்கே விற்கின்றனர். இந்தக் காலங்களில் எவரும் விற்பனையாளர்களுககு உத்தரவு போட முடியாது. மனச்சாட்சியின்படி நடந்து கொண்டால் சரிதான்.

    ReplyDelete

Powered by Blogger.