April 09, 2021

நாட்டில் பல எதிர்பாராத மாற்றங்களை, அரசாங்கம் உருவாக்கி வருகிறது - அசோக்க அபேயசிங்க Mp


இன்று(09) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேயசிங்க அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

ஒரு நாடு ஒரு சட்டம், முறைமை மாற்றம் ஏற்படுத்த ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று நாட்டில் பல எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கிய வன்னமுள்ளது. இந்த ஆட்சியை  ஏற்படுத்த முன் நின்ற பிக்குகள் இன்று இந்த அரசாங்கத்தை விமர்சித்த வன்னமுள்ளனர். அன்மையில் கொட்டம்பே விஹாராதிபதியை சந்திக்க சென்ற எஸ்.பி.திஸாநாயக்கவிடம் அவர் கூறிய விடயங்களை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிவோம்.இது தான் பிக்குகளின் இன்றைய நிலை. 

யாழில் புதிய பாதுகாப்பு அங்கிகளுடன் செயற்ப்ட்ட நபர்கள் தொடர்பாக நோற்று கீன்ஸ் நெல்சன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பிறகே அரசாங்கம் இது குறித்து அறிந்து கொண்டது.பின்னர் தான் புலனாய்வு அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்தினர்.இது தான் இந்த அரசாங்கத்தின் ஒரு நாடு ஒரு சட்டம், முறைமை மாற்ற அரசாங்கத்தின்  நிலையாகும். யாழ் நகர முதல்வர் ஈபிடிபி (EPDP)என்பதால் அரசாங்கம் மௌனமாகவுள்ளது. இதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA)என்றால் அரசாங்கத்தின் நடவடிக்கையும் வேறு விதமாக இருந்திருக்கும். 

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம்

என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.150 ஏக்கர்

இலங்கையின் ஆழுகையிலும்,250 ஏக்கர்

சீனாவின் ஆழுகையிலும் மிகுதி பொதுப் பகுதி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்

 ஆளுகைக்கு ஜனாதிபதியால் அவர் விரும்பும் ஐவரை நியமிக்கலாம் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐவர் குழு பாராளுமன்றத

திற்கு பெறுப்புக்கூறும் விடயத்திலிருந்து விடுவிக்கப்ட்டுள்ளனர். இது பாரிய ஆபத்தான ஷரத்தாகும். இந்த கொரும்பு துறை முக நகருக்குள் பிரவேசிக்கும் ஒருவர் டொலர்களில் பொருட்களைக் கொள்வனவு செய்து வெளியேரும் போது வரி செலுத்தவும் வேண்டும். நாட்டுப் பிரஜைகள் நாட்டிலுள்ள பிரிதொரு இடத்திற்கு சென்று வர வரி அறவிடும் நிலை இந் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரிதொரு அமைச்சர் கசிப்பு உற்பத்திற்கு அனுமதி வழங்கக் கோருகிறார். இது தான் முறைமை மாற்றம். 

மாற்றீடுகள் இன்றி பாம் ஒயிலைம் தடை செய்துள்ளனர். 25% தேங்காய் எண்னெயுடன் ஏனைய வகைகளையும் கலக்க முடியும் என்ற வர்த்தமானியை முதலில் வெளியிட்டது நிமல் சிறிபாலடி சில்வாவாகும்.மஹிந்த அரசாங்கத்தில் தான் இந்த முடிவை எடுத்தனர். ஆனால் நல்லாட்சியில் நாங்கள் முதல் முதலில் இந்த வர்த்தமானியை வெளியிட்டதான தேற்றப்பாட்டை மக்களிடம் ஏற்படுத்த முற்படுகின்றனர்.

தரமற்ற தேங்காய் எண்னெய் என்பதை அரசாங்கம் அறிந்து கொண்டே இவ்வாறு மக்கள் குறித்து சிந்திக்காமல் செயற்படுகின்றனர். இதன் வெளிப்பாட்டைத் தான் இலங்கை தர நிர்ணய சபைத் தலைவர் ஏதோ ஓர் வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

நாட்டிற்கு 9000 மெட்ரிக் டொன் பாம் ஒயில் வருடாந்த தேவை.ஆனால் 2000 மெட்ரிக் டொன் தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாற்றீடு இல்லாது ஒரே தடவையில் எந்த திட்டமும் இல்லாது தடை செய்ததால் அதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் சரிவிலுள்ளதாக  குறிப்பிட்டார்.

1 கருத்துரைகள்:

Post a Comment