Header Ads



எந்த கொம்பன் என்றாலும், சுகாதார விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை - களத்தில் அதிரடி காட்டும் Dr சுகுணன்


கல்முனை பிராந்தியத்தை காப்போம்  கல்முனை பிராந்தியத்தில் எந்த கொம்பன் என்றாலும் சுகாதார விதிகளை மீறினால், தனிமைப்படுத்தப்படுவர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இன்று -27- சாய்ந்தமருது, கல்முனை நகரம், மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை பகுதிகளில் கொவிட் 19 பாதுகாப்பு முறைமைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதை சுகாதார வைத்திய அதிகாரிகள் போலீசார் ராணுவத்தினர் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் என்பவர்கள் உடன் இணைந்து நானும் தொற்றுநோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஷ் அவர்களும் ஆய்வு செய்து இருந்தோம். 

இந்த நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன் ஆறு கடைகள் ஒரு இறைச்சிக் கடை மற்றும் இரு பிரபல்யமான வங்கிகள் இழுத்து மூடப்பட்டது. 

பாதுகாப்பு நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க பலருக்கு எதிராக எச்சரிக்கை வழங்கப்பட்டது. 

எதிர்வரும் காலங்களில் நமது நடவடிக்கைகள் இந்த பிராந்திய மக்களை பாதுகாப்பதில் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை இன்று தீங்கு விளைவிக்கும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். 

நோன்பு தினத்திலும் கடுமையான வெயில் இருக்கும் பொழுதும் நம்முடன் இணைந்திருந்த அனைவருக்கும் இறைவன் ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்.

முகக்கவசம்,  சமூக இடைவெளி, கைச்சுகாதாரம் என்பன இன்றியமையாதது.  கொவிட்-19 மூன்றாம் அலையை அனைவரும் இணைந்து வெற்றி கொள்வோம்.

- Dr Sukunan Gunasingam -




No comments

Powered by Blogger.