Header Ads



பாராளுமன்றம் இன்று ஆரம்பமானதுமே சலசலப்பும் ஆரம்பம்


- ஜே.ஏ.ஜோர்ஜ் -

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(09) காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் ​கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்ட அஜித் மான்னப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனையடுத்து, எழுந்துநின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரின் அனுமதியுடன் தியவன்னா ஓயா குறித்து பிரச்சினையொன்றை எழுப்ப ஆரம்பித்தார்.

உடனடியாக எழுந்து நின்ற ஆளுங்கட்சி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சபாநாயகர் அறிவிப்புக்கு முன்னதாக எதிர்கட்சித் தலைவர் உரையாற்றுவது சம்பிரதாயத்துக்கு முரணானது என எதிர்ப்பு வெளியிட்டார்.

அதனையடுத்து, சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டதுடன், பின்னர், சபாநாயகர் தனது அறிவிப்புக்கு பின்னர் உரையாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கூறினார்.

அதன்பின்னர் சலசலப்பு ஓய்ந்து சபை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது.

No comments

Powered by Blogger.