Header Ads



ஒரு பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டுமென முஸ்லிம்கள் நாட்டுக்கு உணர்த்தியுள்ளனர் - பால் தாக்கரே பாராட்டு


மஹாராஷ்ட்ரா கொல்ஹாபூருக்கு அருகில் உள்ளது இஸால்கஞ்ச் நகர். மும்பையிலிருந்து 380 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது இந்நகர். இங்குள்ள முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட்டங்களை குறைத்துக் கொண்டு அதற்கான செலவு தொகையையும் ஜகாத் தொகையையும் இணைத்து ஒரு அழகிய பணியை செய்துள்ளனர்.

இங்குள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு 36 லட்சம் செலவில் 10 படுக்கை வசதிகளுடன் கூடிய ஐசியூ கட்டிடத்தை தானமாக வழங்கியுள்ளனர். இதனை காணொளி மூலம் மஹாராஷ்ட்ர முதல்வர் உத்தவ தாக்கரே திறந்து வைத்தார். அப்போது அவர்....

'நெருக்கடியான இந்த நேரத்தில் ஒரு பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை இஸால்கஞ்ச் முஸ்லிம்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளனர். இந்நகரில் 10 படுக்கைகளுடன் ஐசியூ வசதியுடன் கூடிய முதல் அரசு மருத்துவமனையாகவும் இது திகழ்சிறது. முஸ்லிம்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா

27-04-2021 

ஒரு காலத்தில் பால் தாக்கரே முஸ்லிம்களை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பதற்கு முன் மதத்தை வைத்து நாம் முன்பு பல தவறுகளை செய்துள்ளோம் என்று வருத்தப்பட்டிருந்தார். தற்போது முஸ்லிம்களைப் பற்றிய சிறந்த புரிதல் முதல்வருக்கு வந்துள்ளது. இது போன்று நன்மையான காரியங்களை செய்து எதிரிகளையும் நண்பர்களாக்குவோம்.

No comments

Powered by Blogger.