Header Ads



பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இளைஞன் யார்..? - என்ன நடந்தது..?? (முழு விபரம்)


கொழும்பு மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தர் ஒருவர் இளைஞர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.

பொலிஸ் அதிகாரியால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரிய வருகிறது.

இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு வந்துள்ளார்.

மஹரகம நகர் வரும் போது இவரது கண் அசதியாக ஒரு கணம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொவிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி மெதுவாக உரசி இருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியான லொறி சாரதியை தாக்க பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தர் தாக்கி இருக்கிறார்.

தற்போது தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார்.

ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு தலை மற்றும் வயிறு வலிப்பதாக இவரை பார்க்க சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார். எனினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவனம் யூனி பிரதர்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும். இளைஞரின் நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாக தெரிவித்த அவர்கள் இது தொடர்பாக மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்ய இருப்பதாக சொன்னார்கள்.

தாக்கிய குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. everywhere Racism, what fucking shit that Auto-driver did? and what is his involvement in this incident and what is the law for that basted?

    ReplyDelete
  2. Brutal Buddhist Police attach on Minority...

    ReplyDelete
  3. Arrest them all who took the Law into their hands if the Law is existing in SriLanka.... One Law one country

    ReplyDelete

Powered by Blogger.