Header Ads



உரிய விசாரணை செய்திருந்தால் அரசாங்க உயர் ஆசனங்களில் உள்ள 2 முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பர்


இனவாத, மதவாத செயற்பாடுகள் இருதரப்பிலும் ஏற்படுவதற்கு சில அமைப்புகளை விட அப்போது ஆட்சியிலிருந்த  அரசாங்கத்தின் தேவைக்கமையவே இடம்பெற்றதாகத் தெரிவித்த தேசிய புத்தி ஜீவிகள் சங்க சபையின் உறுப்பினர் ஹடிகல்லே விமலசார தேரர்,  இவை எவற்றையும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரிக்கவில்லை என்றார்.

'உரிய முறையில் விசாரணைகளைச் செய்திருந்தால், தற்போது அரசாங்கத்தின் உயர் ஆசனங்களில் இருக்கும் இரண்டு முக்கிய புள்ளிகள் சிக்கியிருப்பர். அவ்விருவருமே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறியிருக்க வேண்டும்' என்றார்.

கொழும்பில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துப்பாக்கி கட்டளைச் சட்டத்தை முழுமையாக மீறி, நிசங்க சேனாதிபதி என்பவர் அவன்கார்ட் என்ற சட்டவிரோத துப்பாக்கி நிறுவனத்தை வைத்திருந்தார். இதன்மூலம்  நிசங்க சேனாதிபதி தனிநபர், அமைப்புகளுக்கு துப்பாக்கிப் பயிற்சியை வழங்கியுள்ளார். எனினும், அவர் யாருக்குஇ எந்த அமைப்புக்கு துப்பாக்கி பயிற்சியை வழங்கினார் என, இதுவரை எவ்வித தகவல்களையும் வெளிப்படுத்தபடவில்லை' என்றார். 

இது முற்றிலும் சட்டவிரோத செயற்பாடு; அவ்வாறு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுமாயின் அது இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு அல்லது அரசாங்கத்தால் மாத்திரமே வழங்கப்பட வேண்டும். எனவே, தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவுக்குப் பொறுப்பொன்று இருந்தது. நிசங்க சேனாதிபதி  யாருக்குப் பயிற்சி வழங்கினார்? இதற்கான நிதி எங்கிருந்து கிடைத்ததென ஆணைக்குழு விசாரிக்கவில்லை என்றார்.

No comments

Powered by Blogger.