Header Ads



இலங்கை தொடர்பாக ஆராய ஐ.நா. புலனாய்வாளர்கள், சட்ட ஆலோசகர்கள் 12 பேர் நியமனம்


இலங்கை தொடர்பாக ஆராய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால், சட்ட ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

இலங்கை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில்,  ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அவர்களில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து, தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள், இவ்வனைவரையும் மேற்பார்வை செய்வதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் ஆகியோரையே நியமிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. Attorney General Department failed to perform its duty towards citizenry, so the Human rights office in Colombo, is going to be act as an international attorney general department to collect evidence and complaints in Sri Lanka in order to report them to the international body to file case against Sri Lanka in the international courts. What is the stance of the govt. of Sri Lanka to face these challenges.

    ReplyDelete

Powered by Blogger.