Header Ads



UNP யிலிருந்து தூரவிலகிய பௌத்த, கத்தோலிக்க வாக்குகளை பெற திட்டம் - 70 இலட்சம் பெற்றால் வெற்றி


எதிர்வரும் தேர்தல்களின் போது வெற்றியீட்டுவதாயின், 70 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அந்த இலக்கை அடைவதற்கு, அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும், முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தூர விலகிச் சென்ற சிங்கள பௌத்த, கத்தோலிக்க, மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்த வாக்காளர்களினதும் கட்சியை விட்டுச் சென்றவர்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள, கட்சி நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக, புதிய அதிகாரிகள் சபையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள், இவ்வாண்டு ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன.

அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாவட்ட ரீதியில் எமது அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, எமது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படும். இந்தப் பணிகள், இப்போது நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன என்று, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. எப்போது யூன்பீயும் ரணிலும் முஸ்லிம் பா.உ. களை முஸ்லிம்கள் என்ற காரணத்தால் அவர்களை உயர்பதவிகளில் இருந்து பதவியிறக்க ஆரம்பித்ததுடன் யூஎன்பீயின் அழிவு ஆரம்பமாகியது. இதற்கு என்ன காரணம், யூஎன்பீயின் உள்ளே இருக்கும் இனவாதிகளின் செல்வாக்குக்கு உற்பட்டு ரணில் இயங்க ஆரம்பித்தமைதான் அதன் அழிவுக்கு காரணமாயிற்று. அது போல ரணில் திகனயில் இனவாதிகள் செய்த அட்டகாசத்தைக் கண்டும் காணாமல் இருந்தமையும் ரணிலின் அழிவின் ஆரம்பம். எனவே எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து அவற்றி லிருந்து தவிர்ந்து கொண்டால் தம்மைத் தக்கவைத்துக் கொள்ளலாம்.அல்லது அரபு பழமொழி கூறுவதுபோல 'மண்தகப்பர குண்டி குப்பர' என்பது தான் இறுதி விளைவு. அதனையே தற்போதைய அரசாங்கம் நன்றாக அனுபவிக்கின்றது. அதன் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்கள் தான் என்பது அதன் செயல்பாடுகளால் தௌிவாகப்புரிகின்றது. இனி அதன் அழிவைப் பொறுதிருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.