Header Ads



வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறும், சமூக ஊடக விளம்பரங்களை நம்பவேண்டாம்


வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பணியகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும்.

எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுத்தியுள்ளது. Hiru

No comments

Powered by Blogger.