Header Ads



சஹ்ரானின் பொஸ் (Boss) யார் என வெளிப்படுத்துங்கள்


இன்று(25) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தொரிவித்த கருத்துக்கள்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் மூலமாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மூலமாகவும் இந் நாட்டின் சுயாதீன நீதிக் கட்டமைப்பும்,ஜனநாயக விழுமியங்களும் இன்றுள்ள நிலையிலிருந்து முன்னோக்கிய நிலையில் வலுப்படுத்தும் சக்தி அவருக்கு ஏற்பட நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசரணை அறிக்கை மதிப்பிற்குறிய காதினல் அவர்களினதும் ஏனைய கத்தோலிக்க மதத் தலைவர்களின் தொடரான கோரிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கையை மீள் பரிசீலனை செய்ய எந்த சட்டத்துரை அனுபவமும் அற்ற ஆறு போர் கொண்ட குழுவென்றை பக்க சார்பாக நியமித்துள்ளனர்.உன்மையில் இந்த அறிக்கையை நாட்டு மக்களிடமிருந்து மறைக்கவே முற்பட்டனர்.காதினல் அவர்களில் முயற்சியால் தான் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஆறு போர் குழ நியமிக்கப்பட்டதன் உன்மையான நோக்கம் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உள்ளடக்கிய சில பக்கங்களை நீக்குவதற்கும் சில இனைப்புகளை தாமாக இனைப்பதற்கீகவும் தான்.

இன்று காதினல் அவர்கள் அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையின் பக்கம் குரல் கொடுக்கும் போது அவருக்கு எதிராக சில குழுக்கள் அவரை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இந்த அறிக்கையையும்,இந்த அறிக்கையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஆறு போர் கொண்ட குழுவையும் அவர் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று தொரிவித்துள்ளார்.ஒன்றில் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அல்லது விசாரனைகளுக்காக பாதுகாப்புத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.இது சட்டத்துறை சார்ந்த அனுபவமற்ற வெறும் வெற்றுக் குழுவெனத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் ஏறப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்டது,இன்னும் முறையான விசாரணைகள் இல்லை.ஏன் இவ்வளவு பின்னடைவு?இலங்கையர்கள் மாத்திரம் அல்ல வெளிநாட்டுப் பிரஜைகளும் இதில் உயிரிழந்துள்ளனர்.சர்வதேச நாடுகள் இவ்வாறான தாக்குதல் தொடர்பாக துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்து தன்டனையையும் வழங்கி இருக்கும்.இன்றும் கூட இத்தாக்குதல் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

இந்த தாக்குதல் மூலம் கூடுதல் பயனடைந்தவர்கள் யார்? சாரா யார்? அபு என்பவர் யார்? இந்தியாவிற்குள்ள தொடர்பு என்ன? முன்கூட்டி இந்தியாவிற்கு எவ்வாறு தெரியவந்தது? புலனாய்வு அதிகாரிகள் யார்? அவரகளுக்கு எவ்வாறு இந்த தகவல் முன்கூட்டியே தெரியவந்தது?பணம் வழங்கியது யார்? பின்னனியில் செயற்பட்டவர் யார்? இயக்கியது யார்? போன்ற விடயங்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அரசியல் கரணங்களுக்காக இதை பயன்படுத்த வேண்டாம்.இந்த தாக்குதலை வைத்து அதிகாரத்தைப் பலப்படுத்த வேண்டாம்.இதை வைத்துக் கொண்டு நாட்டில் இனவாதத்தை போஷிக்க வேண்டாம்.

ஈஸ்டர் தாக்குதலை சஹ்ரானுடன் முடிவிற்கு கொண்டு வர முயன்றால் அதை காதினலும் நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.எங்களுக்கு தேவை சஹ்ரானின் பொஸ்(Boss) யார் என்பது தான்.அதை வெளிப்படுத்துங்கள்.மக்களின் உணர்வுகளுனடன் விளையாடாதீர்கள்.

அறிக்கையில் தொரிவிக்கப்பட்டுள்ளது போல் இத்தாக்குதலுடன் தொடர்பான சர்வதேச தொடர்புகளுக்கென்று விஷேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோருகிறோம்.சகல உறுப்பினர்களுக்கும் முறையான பூரண அறிக்கையை 

சமர்ப்பித்து மூன்று நாட்கள் பாராளுமன்ற விவாதத்தை வழங்குமாறு அரசாங்கத்தை வேண்டிக் கொண்டார்.

No comments

Powered by Blogger.