Header Ads



நடைபவணி போராட்டத்தின் இறுதிநாள் இன்று - முஸ்லிம்களும் பங்கேற்பு ஆசாத் சாலியும் கலந்து கொண்டார்

சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான நடைபவணி போராட்டத்தின் இறுதி நாள் பேரணி இன்று -07- இடம்பெறுகிறது.

சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 3 ஆம் திகதி இந்த தொடர் போராட்டம் அம்பாறை - பொத்துவில் பகுதியில் ஆரம்பமானது.

இதையடுத்து, இந்தப் பேரணி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஊடாக நேற்று மாலை கிளிநொச்சியை சென்றடைந்தது.

இந்த நிலையில், கிளிநொச்சி டிப்போ சந்தியில், இன்று காலை ஆரம்பமான நடைபவணி தற்போது, யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.



No comments

Powered by Blogger.