Header Ads



காதி நீதிமன்றம் தொடர்பில் கவிந்த Mp க்கு விளக்கம் வழங்கிய, நீர்கொழும்பு முஸ்லிம் தூதுக்குழுவினர்


- இஸ்மதுல் றஹுமான் -

கம்பஹா மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன காஸி நீதிமன்றம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக நீர்கொழும்பு முஸ்லிம் தூதுக்குழுவினர் அவரைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

ஓய்வு நிலை அதிபர் எம்.எம்.எம். றிழுவான் தலைமையில் முன்னால் வங்கி முகாமையாளர் யூ. எல். ஏ. கரீம், சட்டதரணி எம். பீ. எம். மாஹிர், அரச உத்தியோகத்தர் இலாம் காசிம், சர்வதேச பாடசாலை அதிபர் எஸ்.எம். சிராஜ், ஊடகவியளாலர் எம்.எம்.ஐ. றஹுமான் ஆகியோர் எம். நிஹாரின் ஏற்பாட்டில் டாக்டர் காவிந்த ஜயவர்தனவைச் சந்தித்தனர்.

காஸி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்ற உங்கள் கூற்றினால் முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளனர். முஸ்லிம்கள் 1806ம் ஆண்டு முதல் அனுபவித்து வந்த உரிமைகளையும் காஸி நீதிமன்றம் கடந்த பல தசாப்தங்களாக இயங்கி வருகின்றன என்பதையும் தெளிவு படுத்தினர். நீங்கள் தேர்தல் காலத்தில் இந்தக் கூற்றை தெரிவிக்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். உங்கள் கூற்றால் முஸ்லிம்கள் நொந்து போயுள்ளனர். இது தொடர்பாக முஸ்லிம்கள் கூடுதலாக வாசிக்கும் விடிவெள்ளி பத்திரிகை யிலும் செய்தி வெளிவந்துள்ளது.

காவிந்த எம் பி தெரிவிக்கையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தான் காஸி நீதிமன்றத்தை நீக்குவோம் என தேர்தல் காலத்தில் கூறி வெற்றிபெற்றார்கள். அதனை ஏன் இப்போது செய்வதில்லை என்றுதான் நான் கேட்டேன்.

முஸ்லிம் பெண்களும் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அவர்களுக்கு நடந்த அநியாயங்களை கூறினார்கள் என்றார்.

அதற்கு பதிலளித்த தூதுக்குழு காஸி நீதிமன்றங்களில் அநீதி இடம்பெற்றால் காதிகள் சபைக்கு அல்லது மேன் முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்பவற்றிற்கும் மேன்முறையீடு செய்யமுடியும். ஊடகங்களுக்கு முன் பேசிய பெண்கள் அவ்வாறு முறையிட்டதாக தெரியவில்லை.

காஸி நீதிமன்ற செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்திசெய்யமுடியும் மாறாக அதனை இல்லாமல் செய்யமுடியாது என்றனர்.

அமைச்சரவையிலுள்ள பலம்வாய்ந்த அமைச்சராக நீதி அமைச்சர் அலி சப்ரி விளங்குகிறார் அவர் ஏன் இதுதொடர்பாக தீர்மானம் எடுப்பதில்லை என காவிந்த கேள்வி எழுப்பினார்.

உங்கள் கட்சி பாராளமன்றக் குழுவிலுள்ள முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களுடனும் இதுதொடர்பாக கலந்துரையாட முடியும் எனவும் அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

விடிவெள்ளியில் கட்டுரையை எழுதிய செய்தியாலருடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி தனது நிலைப்பாட்டை பாராளமன்ற உறுப்பினர் ஜயவர்தன தெளிவுபடுத்தினார்.

No comments

Powered by Blogger.