Header Ads



லண்டனில் தமிழ் பெண், சாகும்சவரை உண்ணாவிரதம்


3 கோரிக்கைகளை முன்வைத்து, லண்டனில் தமிழ் பெண் சாகும்சவரை உண்ணாவிரதப்போராட்டம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ளார்.

அம்பிகா செல்வகுமார்சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக அம்பிகை பணியாற்றுகின்றார். அத்துடன் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.

No comments

Powered by Blogger.