Header Ads



இலங்கையில் 42 ஆயிரம் கிராமங்கள் உள்ளன, ஜனாதிபதி இவற்றுக்கு செல்ல 35 ஆண்டுகள் தேவை - அனுரகுமார


இலங்கையில் 42 ஆயிரம் கிராமங்கள் இருப்பதாகவும் அவை அனைத்துக்கும் செல்ல 35 ஆண்டுகள் செல்லும் எனவும் ஜனாதிபதி கிராமங்களுக்கு செல்வது கேலிக்குரியது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கிராமங்களுக்கு சென்று கண்காணிப்பது தவறல்ல. எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இதுதான் ஒரே வழி என நம்பினால், அது கேலிக்குரியது.

இதற்கு செயற்பாட்டு ரீதியாக வழிகள் இருக்கும் போது ஜனாதிபதி அர்த்தமற்ற கண்காட்சி வழியை தெரிவு செய்துள்ளார். மைதானங்கள் இல்லாத பாடசாலைகளை தேட கிராமம் முழுவதும் நடந்து திரிய வேண்டிய அவசியமில்லை. கல்வியமைச்சின் அதிகாரிகள் ஊடாக அந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்களை சீருடையில் அழைத்து வந்து கேள்வி கேட்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாதவர்களை அழைத்து வந்து கேள்வி கேட்கின்றனர். மற்றுமொருவர் மரத்தில் ஏறி இருந்துக்கொண்டு கேள்வி கேட்கின்றார். இது கேலிக்குரியது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. all showing business.... Innocent people are still not wakeup...

    ReplyDelete
  2. 35ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான அடிமட்ட வசதிகள் அனைத்தும் ஆரம்பித்து விட்டது என்பதனை தாங்கள் அறியாமல் இருக்கமுடியாது. நேரடியாகச் சொன்னால் மக்களும் அதற்குத்த தயாராகி விடுவார்கள் என்பதனால் சுற்றி வளைத்துக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

    ReplyDelete
  3. If it will take 35 years to visit all 42000 villages in the country, that would mean visiting 1200 villages in a year and more than 3 villages a day working 7 days a week!

    There will be NO Time for any Other work for 35 years!!

    ReplyDelete

Powered by Blogger.