Header Ads



ஜெனிவாவில் ஐ.நா.வில் இலங்கைக்கு சார்பாக 18 நாடுகள் களத்தில்...?


- TN -

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவு, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் குழுவினரின் முயற்சியைத் தடுப்பதற்கு, தமக்கு நட்பான நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது.

2019இல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச்சில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

நல்லிணக்கத்தின் அலுவலகம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் 49ஆவது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பித்த விடயங்களை உள்ளடக்கியும் முதல் வரைவு காணப்படுகிறது.

- TN -

3 comments:

  1. அந்த 18 நாடுகளின் பெயர்களை இங்கு குறிப்பிடுங்கள். அதனை அறிய பொதுமக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    ReplyDelete
  2. ALL INVESTIGATIONS ARE DRAMAS NOTHING HAPPEN TO THOSE WHO DID GENOCIDE.

    ReplyDelete
  3. who are the bloody 18 countries try to hide the truth

    ReplyDelete

Powered by Blogger.