Header Ads



அனாதரவாக வில்பொல கிராமம் - உதவிக்கரம் நீட்டுமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அவசர அழைப்பு

பயணத்தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அன்றாடம் கூலித்தொழல் செய்பவர்களும் நிறந்தர வருமானங்கள் அற்றவர்களுமே  அதிகமாக இங்கு வசிக்கிறார்கள் .  இங்கிருந்து யாரும் வெளியில் செல்லவோ வெளியிலிருந்து யாரும் உள்ளேவரவோ முடியாத நிலை . இருந்தபோதும் மக்களை  அரசாங்க தரப்பிலிருந்து யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும்  இதுபற்றி அறிவித்தும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லை.  இதனால் மக்கள் மிகுந்த சிறமங்களை அனுபவித்து வருகிறார்கள்  . 

 திடீரென மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை அடுத்து 13 பேர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப் பட்டார்கள். அன்றே (12) மாலை 6.00 மணிமுதல் 

வீதித்தடைகள் இடப்பட்டு பயணத்தடையும் விதிக்கப் பட்டன.  இன்றைக்கு இரண்டு வாரங்களைத் தாண்டிவிட்டது . மொத்தமாக இக்கிராமத்தில் 300 குடும்பக்கள் இருக்கின்றன. 

தற்போதய சூழ்நிலையில் இவர்கள் தனவந்தர்களின் உதவியை நாடுகிறார்கள். உதவிசெய்ய விரும்பியவர்கள் அல் மனார் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபையுடன் தொடர்பு கொள்ளுங்கள். தர்மம் செய்வதால் உங்களது செல்வத்தில் குறைபாடு ஏற்படாது . நிச்சயமாக இறைவன் உங்களது 

செல்வத்தில் அபிவிருத்தியை உண்டுபன்னுவான் . (முடிந்தவரை like & share பண்னவும் )

தொடர்புகளுக்கு :-

தலைவர் ,0779339373 

செயளாலர் , 0777242010

அல் மனார் ஜும்ஆ மஸ்ஜித் 

வில்பொல - அறனாயக்க 


No comments

Powered by Blogger.