Header Ads



அடுத்த மாதம் முதல், 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை


(இராஜதுரை ஹஷான்)

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேணுவதற்கு வர்த்தகத்துறை அமைச்சு  தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அரிசி, மா,பருப்பு ,டின் மீன்,நெத்தலி, வெங்காயம்,உருளைக்கிழங்கு,கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகிய 10 அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான நிர்ணய விலை அடுத்த மாதம் முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நுகர்வோர் அத்தியாவசிய உணவு பொருட்களை நிர்ணய விலையில்  கொள்வனவு செய்யும் நோக்குடன் இத்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு நிர்ணய விலையை பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக  அமைச்சர்  பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.

நிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கக்கூடிய வர்த்தகர்களிடமிருந்து விலைமனுக்களை கோரப்படும்.

அடுத்த மாதம் முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அப்படியானால் அடுத்த மாதம் முதல் ஐந்துபேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு மாதம் 2500 ரூபாவுடன் மாதாந்த செலவைச் சமாளிக்கலாம் என பொருளாதார அமைச்சர் வாக்குறுதியளிக்கின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.