Header Ads



கொரோனா நோயாளியின் மோசமான செயல் - துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு


அட்டளுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு தடை ஏற்படுத்தியதுடன், பொது சுகாதார பரிசோதகரின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டாரகம அட்டளுகம பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பொது சுகாதார பரிசோதகர் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நோயாளியை சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயற்சித்த போது பொது சுகாதார பரிசோதகரின் முகத்திற்கு எச்சிலை உமிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடமைக்கு தடை ஏற்படுத்தியமை மற்றும் சிகிச்சைக்கு செல்வதை நிராகரித்தமை ஆகியவை நாட்டிற்கு செய்யும் துரோக செயல் என தண்டனை வழங்க முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    வெருக்கப்பட வேண்டிய செயல்.

    ReplyDelete
  2. you people are spreading the corvid to Muslim with infected test equipment and attacking Muslims, what is going on in Sri Lanka, is this new tactic to attack Muslim?

    ReplyDelete
  3. ஹிரு மற்றும் தெரணைக்கு ஒரு செய்தியை நம்மவர்கள் உண்டாகி விட்டார்களா?

    ReplyDelete
  4. அவன் ஒரு முஸ்லிமா?

    ReplyDelete
  5. This is formula to against Muslims

    ReplyDelete
  6. ஸஹ்ரானின் கோட்டையை அரசாங்கத்துக்கு காட்டிக்கொடுத்த முஸ்லிம்களுக்கு கிடைத்தது தீவிரவாதிகள் என்ற பெயர் தான். முஸ்லிம்கள் எவ்வளவுதான் நல்ல பெயர் எடுக்க பார்த்தாலும் அது கிடைக்காது.

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வதை மாத்திரம் நம்ப முடியமா?
    இரு பக்க விசாரணை நடந்தால் உ‌ண்மை விளங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.