Header Ads



தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாட்டில், தடை செய்ய வேண்டும் - அமைச்சர் சரத் வீரசேகர


யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் நாட்டில் தடை செய்ய வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. 

நளின் பண்டார எம்.பி 

நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை முன்னோக்கிச் கொண்டுச் செல்ல முடியும். அவ்வாறிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டுமென கூறுவதை ஏற்கமுடியாது  என்றார்.

சால்ஸ் நிர்மலநாதன் எம்.பி 

அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டிக்கிறோம். இட்லர் போன்று மஹிந்த செயற்பட்டிருந்தால் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே இவர்களை ஒழித்திருக்க வேண்டும் என கூறிய கருத்து பாரதூரமானது. எனவே, அவர் சபையில் மன்னிப்புக்கோர வேண்டும். 

அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளாலேயே இனவாதம் வளர்ந்து வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு நிரந்தர தீர்வு வழங்குங்கள்.

அமைச்சர் சரத்வீரசேகர

பிரிவினைவாத கருத்துக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர் ஆகவே நான் அவ்வாறு கூறினேன்.

5 comments:

  1. பைத்தியம் முத்திடீச்சி

    ReplyDelete
  2. இவருடைய அரசியல் மூலதனமே இனவாதம் தான். வல்லமை நிறைந்த ஈரானுக்குள் நுழைந்தவர்கள் அந்நாட்டின் கண்களையே பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். இவர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட விழைகின்றார். எனது பாமர நண்பர் ஒருவர் கூறும் வார்த்தை இவ்விடத்திற்கு பொருத்தமாக அமையும் என்பதால் பதிவு செய்கிறேன். "குச்சிப்பெட்டியைக் கொண்டு விண்வெளி செல்லும் காலம் இது".

    ReplyDelete
  3. This kind of person entering parliment should Ban completly.

    ReplyDelete
  4. நாடகத்தின் அடுத்த கட்டம் தமிழ் சமூகத்தைத் தீண்ட ஆரம்பிக்கின்றது. அது நிச்சியம் குத்திக்கொண்டு சென்று வாழைமரத்தில் குத்திய கதையாக நிச்சியம் மாறும், மாற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.பொருளாதாரத்தையும் சமூக மேன்பாட்டையும் விடுத்து இனவாதத்திலும் துவேசத்திலும் நாட்டை முன்னேற்ற ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த வெறியன்களுக்கு அழிவு மிக நெருக்கமாகவே இருக்கின்றது.

    ReplyDelete
  5. அமைச்சர் சரத் வீரசேகர அவர்களே நீங்கள் கூறுவதை விரைந்து செயல்படுத்துங்கள். தமிழர் விடுதலை வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.