Header Ads



பரம்பரையாக வாழ்ந்த பூர்வீகக் காணி, சுற்றுலா துறைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

 திருகோணமலை மாவட்டம் நிலாவெளி 8 ஆம் கட்டையை சேர்ந்த ரசூல் தோட்டம் எனப்படும் சுமார் 61 ஏக்கர் இதுவரை காலம் மக்கள் பாவனைக்குட்பட்டிருந்த காணிப்பரப்பு தற்போது கட்டாயப்படுத்தப்பட்டு சுற்றுலா துறைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்  இன்று (21) நிலாவெளி பிரதான வீதியில் அமைதியான முறையில் காணியை மீட்டுத் தருமாறு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.

இதுவரை காலம் வாழ்ந்து வந்த மக்களுக்கு எந்த வித மாற்று வசதிகளோ நட்ட ஈடோ வழங்கப்படாத நிலையில் இதுவரை எந்த அரசியல்வாதிகளோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ உரிய தகுந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் பதாகைகளை ஏந்தியவாறு தங்களது குடியிருப்பு விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறும் கவனயீர்ப்பின் போது தெரிவித்திருந்தனர்.

2015 ல் அரசுடைமையாக்கப்பட்டு சுற்றுலாத் துறைக்கு கையகப்படுத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.பரம்பரை பரம்பரையாக பூர்வீகக் காணிகளை இவ்வாறு அரசுடைமையாக்கம் செய்வது தங்களுக்கு கவலையளிப்பதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.




1 comment:

  1. கோமாவில் இருந்துகொண்டு இதுவரைக்கும் எந்த ஒரு உருப்படாத, வாக்களித்த திருகோணமலை மக்களுக்கு எதுவும் செய்யாமல்,சஜித் சூ வை நக்கி வாழ்கை நடத்தும் அமைச்சர் இம்ரான் மஹ்ரூப் அவர்களே!புடிங்கி மாதிரி அறிக்கை விட்டது போதும் வாக்களித்த உன் ஊர் மக்களுக்கு இதையாவது செய்.

    ReplyDelete

Powered by Blogger.