Header Ads



இவசமாக PCR செய்ய ஏற்பாடு - ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுக்க முயற்சி


கொழும்பிலும், அதனை கிட்டிய பகுதிகளிலும் இடம்பெறும் மரணங்களில் சந்தேகம் இருப்பதாக கருதுபவர்கள், இலவசமாக PCR செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.


இதனை சமூக ஆர்வலர், சொஹ்ரா புஹாரி தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் கொழும்பில்  உள்ள, நோய் வாய்பட்ட  (கஸ்டப்பட்ட) மக்கள் இந்த பரிசோதனையை இலவசமாக செய்யலாம்.


இந்த PCR பரிசோதனை முடிவுகள், அவர்களின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும்.


நோய் விரிவடைந்து குறித்த நபர் மரணிக்க நேரிட்டாலும், இந்த பரிசோதனை முடிவை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட நபர் கொரோனாவால் மரணிக்கவில்லை எனவும் வாதாட முடியும்.


ஜனாஸாக்களை எரியூட்டப்படுவதை தடுப்பதற்காகவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நோயாளிகளின் வீட்டுக்கு வந்தே, இந்த PCR பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அவசர தொலைபேசி இலக்கம் 077 119 7923

2 comments:

  1. ஜனாஸாக்களை எரிப்பதை தடைசெய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்க முன்பே அரசாங்கம் அதை இனி எரிக்கமாட்டோம் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஏனனில் மரணங்களின் வீதம் உயரும் போது அரசுக்கு அவற்றை எரிப்பதட்கு செலவு செய்யும் தொகையும் கூடிக்கொண்டே செல்லும் அவ்வாறு கூடி செல்லும் போது அரசே எரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.

    ReplyDelete
  2. We cannot believe PCR testf made on the dead bodies by the government. Private PCR test on dead bodies should be allowed. Some wealthy people can come forward to help in this regard.

    ReplyDelete

Powered by Blogger.