திடீர் மரணங்களா..? ஹுசைன் போல்டை தொடர்பு கொள்ளுங்கள் - குறைந்த விலையில் ஜனாஸா பெட்டிகளை வழங்கவும் நடவடிக்கை
இன மத பேதமின்றி 24 மணித்தியாலமும், ஜனாஸா தொடர்பான சேவைகளில் ஈடுபட்டு வரும் உசைன் போல்ட், கொரோனா நெருக்கடி மற்றும் ஊரடங்குகளுக்கு மத்தியிலும் பொலிஸரின் அனுசரணையுடன் இப்பணியை தொடர்கின்றார்.
கொரோனாத் தொற்று காரணமாக மரணிப்போரை எரிப்பதற்கு முன் ஜனாஸாப் பெட்டிகளை வழங்குமாறு வைத்தியசாலைகள் நிர்ப்பந்தித்துள்ளதனால் முஸ்லிம் சமூக அமைப்பின் உதவியுடன், ஜனாஸாப் பெட்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் உசைன் போல்ட் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக கொழும்பில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த பல ஜனாஸாக்களுக்க் ஜனாஸா பெட்டிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஹுசைன் போல்ட் உடன் தொடர்பு கொள்ளக்கூடிய 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கம் 077 119 7923
Post a Comment