Header Ads



வீடுகளில் மரணிப்பவர்கள் குறித்து GMOA தெரிவித்தது என்ன?


வீடுகளில் மரணிக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பில் செயற்படவேண்டிய முறைதொடர்பாக வழிகாட்டல் ஒன் றை சுகாதார அமைச்சு சுகாதார அதிகாரிளுக்கு விரை வாக வழங்கவேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

வீடுகளில் மரணிக்கும் நபர்களுக்கு கொவிட் -19 கொ ரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்து பார்ப் பதற்காக அந்த உடல்களை பி. சி. ஆர். பரிசோதனைக் காக அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர் மானம் நல்லதாக இருந்தாலும் அது தொடர்பாக நடை முறைப் பிரச்சினைகள் பல தற்போது எழுந்துள்ளன.

வீடுகளில் இருக்கும் போது வேறு நோய்களால் மரணித்த பின்னர் பி. சி. ஆர். பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், இதன்போது சுகாதார சேவையாளர்கள் செயற்படவேண்டிய முறை தொடர்பில் முறையான வழிகாட்டல்கள் எதுவும் இல்லை.

வீடுகளில் மரணிக்கும் நபர்களின் பி. சி. ஆர். பரிசோ தனை மேற்கொள்ளவேண்டிய முறை, குறித்த நபரை வைத்தியசாலைக்கு எவ்வாறு எடுத்துச்செல்வது,பி. சி. ஆர். பரிசோதனைக்குத் தேவையான மாதிரியை வீட்டி லிருந்து பெற்றுக்கொள்வதா?

அல்லது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதா, அவ் வாறு எடுத்துச்செல்வதாக இருந்தால் எந்த வைத்தி யசாலைக்கு எடுத்துச்செல்வது, எடுத்துச்சென்ற பின்னர் பி. சி. ஆர். அறிக்கை வரும்வரை குறித்த உடலை எவ்வாறு வைத்துக்கொள்வது போன்ற நடைமுறைப்பிச்சினைகள் தற்போது கீழ் மட்டத் திலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன.

அதனால் இதுதொடர்பாக விரைவாக வழிகாட்டல் ஒன்று தயாரிக்கப்படவேண்டும். அவ்வாறு முறையான வழி காட்டல் வழங்கப்படாவிட்டால், குறித்த உடல்களை அங்கு மிங்குமாக கொண்டுசெல்லும் போதும் நோய் பரவும் அபா யம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.