Header Ads



பேராசிரியர் திஸ்ஸ விதாரண Mp யின் வேதனை



இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும் தன்னுடன் இதுவரை ஒருதடவையேனும் பேச்சு நடத்தவில்லை என்று பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையிலேயே மிகவும் சிரேஸ்டத்துவம் உடைய மற்றும் வைரஸ் குறித்து விஞ்ஞான மற்றும் ஆய்வுரீதியிலான பட்டங்களை பெற்றிருக்கும் எனது அனுபவங்கள் உடன் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஒட்டுமொத்த சமூகமும், ஒட்டுமொத்த நாடுமே இன்று கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளில் சில குளறுபடிகள் இருப்பதாகவும்

கொழும்பு மாவட்டத்தின் நிலைமை மிகவிரைவாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

  1. All are comedy piece when u see the media interviews....

    ReplyDelete
  2. If you are expert on virus matters, please tell the truth about burial for covid deaths. You have to raise your voice for the force cremation. Ignorant minister talk about water content due to burial on the soil because you were silent on this matter.

    ReplyDelete

Powered by Blogger.