Header Ads



றிசாத்தின் விடுதலை தொடர்பில், அக்கட்சியினர் மௌனம் - முஷர்ரபின் நிலைப்பாடு என்ன..?


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

பேச்சு சிறந்ததுதான் ஆனால் அதை விட மௌனம் சாதிக்க வல்லது என  திகாமடுல்ல.பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் விடுதலை தொடர்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கரை காட்டாது மெளனம் காத்து வருவதாக அக்கட்சியின்மேல் மட்ட மற்றும் கீழ மட்ட உறுப்பினர்களினால் முன் வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் 

காரியம் முடியும் வரை காத்திருக்கும் பக்குவம் வேண்டும். சமூகத்தின் விடிவை தாண்டி வேறெந்த அக்கறையுமில்லை. வீண் விமர்சனங்கள் மீதும் எந்த பொல்லாப்புமில்லை.  இறைவன் யாவுமறிந்தவன். நாளும் விடியலுக்காய் காத்திருப்பது ஏமாற்றம்தான். ஆனால் நிச்சயம் விடியல் உண்டு. அதன் பின் மௌனத்தை மொழிபெயர்போம். அது வரை அமைதி காப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. கையாலாகாத்தனத்துக்கு கோழைத்தனமான பதில். அருமை!

    ReplyDelete
  2. ரிசார்டினால் பயன்பெற்றோர் அநேகர் இருந்தும், இன்று அவரை கிட்டி சேர பயப்படுகிறார்கள், அல்லது அவரை தெரியாதவர்கள் போல இருக்கிறார்கள். ஆபத்து வரும்போதுதான் யார் நண்பன், யார் துரோகி என்பது தெரிய வரும்.

    ReplyDelete

Powered by Blogger.