2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
பொலன்னறுவை, வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்திலேயே அவர், அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர், இன்றையதினமே அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹதியா என்பவர், சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்.
அவருடன், வெலிகட சிறைச்சாலையிலிருந்த கொரோனா தொற்றாளர்களில் 28 பேருக்கும் வெலிக்கந்தயிலுள்ள கொவிட் 19 மத்திய நிலையத்தில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
5 கருத்துரைகள்:
This a plot to revenge her
How did she infected?????????
Well planned
எப்படி தொற்றியது.??
அல்லாஹ் பாதுகாக்கவேணும். இவரை கொரோனாவால் இறந்துவிட்டார் என்று அரசியல் இனவெறி நாடகம் நடக்காமல் இருக்க.
Yes
Post a comment