Header Ads



அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எனது குரல் நசுக்கப்பட்டது - Dr ஜயருவான் பண்டார


கொரோனாவை தடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் தனக்கு பரிசு கிடைத்ததாகவும் இதன் மூலம் தனது குரலை அடக்கியதாகவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலான வேலைத்திட்டத்தை அர்ப்பணிப்புடன் செய்த அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், நான் அதிகமாக வேலை செய்தேன் என்பதே என் மீதுள்ள குற்றச்சாட்டாக உள்ளதாக உணர்கிறேன்.

ஊடகங்கள் வாயிலாக கருத்து வெளியிடக் கூடாது என்று எனக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஊடாக சில தனியார் நிறுவனங்கள் முன்வைத்த யோசனைகளை முற்றாக நிராகரிக்கிறேன். நான் மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்த கருத்து தவறானது. இவரது கருத்து எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் இதே போன்ற கருத்தை கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.