October 19, 2020

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், வாக்குமூலம் பற்றிய தெளிவு


- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ் ஷைக் எம். ஐ. எம். ரிஸ்வி முஃப்தி, சென்ற 2020.10.00 ஆம் தேதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். 

சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் மேற்படி சாட்சியங்கள் அளிக்கப்படுவதுடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ் ஷைக் ரிஸ்வி முஃப்தி வாக்கு மூலமளித்துக் கொண்டிருந்த வேளை பல விடயங்களும் அங்கு தெளிவு பெறுவதற்காக வினவப்பட்டது. 

அதன் போதே, குறித்த விடயம் சம்பந்தமாக முஃப்தி ரிஸ்வி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஜனாதிபதி விசாரணை ஆனைக்குழு முன்னிலையில், முஸ்லிம் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்பந்தமான ஒரு கருத்தை வாக்கு மூலத்தின் போது தெளிவுபடுத்தியமை சம்பந்தமாக, அஷ் ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முஃப்தி அவர்களிடம் வினவிய போது, அவர்கள் அளித்த தெளிவினை பொது நலன் கருதி இங்கு பதிவிடுகிறேன்.

முஃப்தி ரிஸ்வி அவர்கள் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்பந்தமாக  தெரிவித்த தெளிவுகள் பின்வருமாறு:

'இலங்கை வாழ் முஸ்லிம்களின் நீண்டகால தேவைப்பாடான இத்திணைக்களம் 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முஸ்லிம் சமய கலாசார விடயங்களை மேம்படுத்தல், பாதுகாத்தல், உட்பட இலங்கை வக்ப் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் என்பன இத்திணைக்களத்தின் செயற்பாடாகும். மேலும் முஸ்லிம் மதஸ்தாபனங்களின் அபிவிருத்தியிலும் பங்குகொள்ளும் ஒரு அரச நிறுவனமாகும்'.

இலங்கை முஸ்லிம்களுக்கு சேவையாற்றி வரும் மேற்படி திணைக்களம் இன்னும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வந்துள்ளேன்ளூ அதாவது, 1994 முதல் 2015 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் புத்தசாசன அமைச்சுடன் இருந்து வந்துள்ளதுளூ 2015இல் தபால் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் புத்தசாசன அமைச்சின் கீழ் வந்துள்ளது. அது எந்த அமைச்சின் கீழ் இருப்பதிலும் எமக்கு எப்பிரச்சினையும் இல்லைளூ ஆனால், சரியான ஒழுங்கமைப்பும் கட்டமைப்பும் இருக்க வேண்டும். அதன் பதவிதாங்குனர்கள் சரியாக கடமையாற்றுவதற்கான வசதிகள், வளங்கள் மேம்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும் என்றே கருதுகிறேன். 

150 வருடங்களாக இந்நாட்டில் மத்ரஸாக்கள் இயங்கிவருகின்றன. முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லைளூ அவற்றை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படலாம். மத்ரஸாக்கள் ஒன்றியத்தின் ஊடாக அவற்றின் வளர்ச்சிக்கான நாமும் முடியுமான பங்களிப்புகளை வழங்கி வருகிறோம்.

1945இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அரபு பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1973இல் அல் ஆலிம் பாடத்திட்டம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்புகளைச் செய்துள்ளோம்.

மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவது மாத்திரம் போதுமானதல்லளூ அவற்றிற்கு முறையான ஒரு கட்டமைப்பு அவசியமாகும்ளூ முறையாக கண்கானிக்கப்பட வேண்டும்ளூ அவற்றை தரப்படுத்தி கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுமாயின் பல சந்தேகங்கள் ஐயங்கள் நீக்கப்படும்.  முன்னாள் உயர் கல்வி அமைச்சர் உஸ்.பி. திசாநாயக்க அவர்களுடன் நாம் இதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தருமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் உள்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அல் ஹாஜ் ஹலீம் அவர்கள், முன்னாள் பணிப்பாளர் அஷ் ஷைக் மலிக் அவர்கள் இதற்காக முடியுமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். தற்போதைய பணிப்பாளர் அஷ் ஷைக் எம்.பீ.எம். அஷ்ரப் அவர்களும் இதற்காக பல் வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். ஆனால் ஒரு கட்டமைப்பு இல்லாமையே இங்குள்ள குறைபாடாகும் என்பதே சொல்லப்பட்ட வாக்கு மூலத்தின் சாரம்சமாகும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ஷைக் முஃப்தி ரிஸ்வி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

3 கருத்துரைகள்:

இங்கே எவ்வாறான கட்டமைப்பு வர வேண்டுமென ஜம்இய்யா எதிர்பார்க்கிறது என்பதையும் அறபுக் கல்லூரிகள் ஒன்றியம் இதுவரை சாதித்தவைகள் என்ன என்பதையும் கட்டுரை ஆசிரியர் இன்னொரு பதிவின் மூலம் தெளிவு படுத்தினார் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். இத்தனை வருடங்களாக அறபுக்கல்லூரகளுக்கான ஒரு பொதுப் பாடத்திட்டத்தைக்கூட தயாரிக்து நடைமுறைப்படுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

இங்கே எவ்வாறான கட்டமைப்பு வர வேண்டுமென ஜம்இய்யா எதிர்பார்க்கிறது என்பதையும் அறபுக் கல்லூரிகள் ஒன்றியம் இதுவரை சாதித்தவைகள் என்ன என்பதையும் கட்டுரை ஆசிரியர் இன்னொரு பதிவின் மூலம் தெளிவு படுத்தினார் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். இத்தனை வருடங்களாக அறபுக்கல்லூரகளுக்கான ஒரு பொதுப் பாடத்திட்டத்தைக்கூட தயாரிக்து நடைமுறைப்படுத்த முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

Frist of all, there must some coordination and cooperation between Muslim academics, intellectuals and policy makers. Do not give policy making and decision making power to all these clerics alone. You all know what will follow that.

Post a Comment