Header Ads



இரவிரவாக நடந்த பேரப் பேச்சு, எதிரணியிருந்து சிலரை இழுக்க முயற்சி - கொழும்பில் அரசியல் பரபரப்பு


அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறும் நிலையில், கொழும்பு அரசியலில் பதற்றநிலை உச்சகட்டத்துக்குச் சென்றிருக்கின்றது.


ஆளும் கூட்டணியின் முழுமையான ஆதரவை இதற்காகப் பெற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்திருப்பதே இதற்குக் காரணம்.


பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகள் சிலவற்றின் அதிருப்தியைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழு அளவில் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தப் பின்னணியில் பிரதான எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெறுவதாகத் தெரிகின்றது.


குறைந்தபட்சம் மூன்று பேரையாவது 20 க்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கான பேரப் பேச்சுக்கள் இன்று காலை வரையில் இடம்பெற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தினக்குரலுக்குத் தெரிவித்தன.


இதன்படி பிரதான எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் சிலர் 20 க்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.