Header Ads



மாட்டிறைச்சி தடையும், உண்பதன் நோக்கமும் - மதமா..? ஆரோக்கியமா..??

இலங்கையில் ஒரு நபர் வருடாந்த இறைச்சி உட்கொள்ளல் வீதம் அதிகரித்துள்ளபோதும் மாட்டிறைச்சி உட்கொள்ளும் வீதம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்துடன் இந்தியா உட்பட பிராந்திய நாடுகளில் மாட்டிறைச்சி உற்பத்தி அதிகரித்துள்ள அதேவேளை இலங்கையில் மாட்டிறைச்சி உற்பத்தி குறைவடைந்துள்ளது முக்கியமானதொரு அம்சமாகும்.

உலகின் மாட்டிறைச்சி உண்ணல், உற்பத்தி மற்றும் அதன் ஆரோக்கியம் தொடர்பானதொரு பார்வை

இறைச்சி உட்கொள்ளலை குறைத்தல் அல்லது முழுமையாக தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்களது தொகை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். விலங்குகளின் நலன், ஆரோக்கியம் மற்றும் விலங்குப் பண்ணை களால் ஏற்படும் சூழல் பாதிப்பு போன்றன இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இறைச்சியற்ற தினம் (Meet free days)  மற்றும் இறைச்சியில்லாத உணவு  (Vegan food) போன்ற விடயங்களுக்கு உலகளவில் தற்போது முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் மாட்டிறைச்சித்தடை செய்யப்பட்டதன் பின்னணியில் அதனால் ஏற்படும் பொருளாதார, ஆரோக்கிய, சமூக மற்றும் அரசியல் தாக்கம் தொடர்பான  தொரு கலந்துரையாடலொன்று தற்போது ஏற்பட்டுள்ளது.

1960களின் பின்னர் உலகில் இறைச்சி உற்பத்தி 5 மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது 70 மில்லியன் டொன்களாக இறந்த இறைச்சி உற்பத்தி 2

017 ஆகும் போது 330 மில்லியன் டொன்களாக அதிகரித்துள்ளது. (UN food and agriculture organization / Our World in data) குறித்த காலப்பகுதியில் மக்கள்தொகை இரண்டு மடங்காக அதிகரித் திருப்பதும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாகும்.

உள்நாட்டு பால் உற்பத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்காக மாடறுப்புத் தடையானது பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்?

சம்பிரதாய விவசாய முறைமையை பாதுகாப்பதற்கு, உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, கிராமிய மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்துவதற்கு மற்றும் பால் மா இறக்குமதிக்கான அந்நியச் செலாவ ணியை குறைப்பதற்குமாக இலங்கையில் மாடறுப்பதனை தடைசெய்வதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இவ்விடயமானது கிராமியப் பொருளாதாரம் மற்றும் பால் உற்பத்தி என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதொரு பொருளா தாரத்தை விட அரசியல் ரீதியானதொரு முடி வொன்றாகும் என்பது பலரின் கருத்தாகும்.

127 வருட பழமை வாய்ந்த சட்டமூலத்தை திருத்தி மாடறுப்பதற்கான தடையை சட்ட மாக்குவதற்கு பிரதமரால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்ததாக அதன் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள் குறிப்பிட்டார்.

விவசாயப் பொருளாதாரத்தில் தங்கியுள்ள இலங்கை போன்றதொரு நாட்டிற்கு மாடு என்பது ஒரு பெரிய வளமாகும் என்று குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மாடு அறுப்பது அதிகரித்துள்ளதால் சம்பிரதாய விவசாய முறைமைக்குத் தேவை யான மாடுகள் பற்றாக்குறை காணப்படு வதாகவும், பால் மா இறக்குமதிக்காக பெரு மளவான அந்நியச் செலாவணி வெளிநாட்டுக்குச் செல்வதை குறைப்பதற்காகவும் கிரா மிய மக்களின் பொருளாதாரத்தை அபிவி ருத்தி செய்யும் வகையில் உள்நாட்டு பால் உற்பத்திப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாடுகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை காணப்படுவதாகவும் பல தரப் பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக’ அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க  விலங்குகள் சட்டமூலம், 1893 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க மாடு அறுப்பு கட்டளைச்சட்டம், தற்போது நாட்டில் காணப்படும் மாடறுப்பு தொடர்பான உள்ளூராட்சி சபைகளின் சட்ட ஒழுங்குகள் போன்றவற்றில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானத்தில் மாட்டிறைச்சி உண் பவர்களுக்கான இறைச்சியை இறக்குமதி செய்து வழங்குவதற்கு தீர்மானம் செய் துள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத மாடுகளுக்கான தீர்வு என்ன என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 22 மில்லியன் மொத்த சனத் தொகையில் 70 வீதம் பௌத்தர்கள், 12.6 வீதம் இந்துக்கள், 9.7 வீதம் முஸ்லிம்கள், 7.6 வீதம் கிறிஸ்தவர்கள், ஏனையவர்கள் 0.03 வீதமாகவும் காணப்படுகின்றனர்.

2018 ஆம் ஆண்டு பால் தேவையின் 45 வீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அதேநேரம் ரூபாய் 50 பில்லியன் பெறுமதி யான 99028 டொன் பால் மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்களின்படி 2019 ஆம் ஆண்டு இலங்கையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மாடுகள் அறுக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு 29,000 டொன் மாட்டிறைச்சி நுகரப்பட்டுள்ளது.

அரசியல் விமர்சகர் குசல் பெரேரா BBC சிங்கள சேவைக்கு பின்வருமாறு தமது கருத்தைத் தெரிவித்தார். ‘இதுவொரு அரசியல் ரீதியான முடிவேயன்றி பொருளாதார ரீதி யானதாகவோ மத ரீதியானதாகவோ எடுக்கப் பட்ட முடிவொன்றல்ல. பெரும்பாலும் இது ஒரு அமைச்சரவைத் தீர்மானமொன்றாக மாத் திரமே இருக்கும் ஏனெனில், இதனை ஒரு ஜனரஞ்சகமான அரசியல் வெடிகுண்டாகவே நான் பார்க்கின்றேன்’ என அவர் குறிப்பிட்டார்.

20 ஆவது யாப்பு சீர்திருத்தம், வர்த்தமானி வெளியிடல், சூழல் மாசடைதல், தேங்காய் விலையேற்றம் மற்றும் பொருட்கள் விலை யேற்றம் போன்ற பல்வேறு வகையான கருத் தாடல்களின் பின்னணியில் இது ஜனரஞ்சக மானதொரு அரசியல் வெடிகுண்டாகும். இது சிங்கள பௌத்த மக்களை சந்தோசப்படுத்து வதற்கானதொரு சிறந்த தலைப்பாகும். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியா போன்ற நாடுகள் மாட்டினை கடவுளாகக் கருதினாலும் அவர்கள்கூட சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மாடறுப்பதனை மேற்கொள்கின்றனர். ஏனெனில் மாடறுப்பு என்பது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய முக்கியமானதொரு விடயமாகும்.

முஸ்லிம் கவுன்சிலின் கருத்து

இது மறைமுகமாக முஸ்லிம் மக்களை நோக்கி மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாக சிங்கள பௌத்த மக்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக காட்டப்பட்டாலும் உண்மை என்னவென்றால் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களுக்கு இது குறுகிய காலத்தில் பாதிப்பாக அமைந்தாலும்கூட அவர்கள் நீண்டகாலத்தில் வேறு வியாபார நடவடிக்கைகளுக்கு மாறுவதன் காரணமாக அவர்களுக்கு இதன் மூலம் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என குஸல் பெரேரா குறிப்பிட்டார்.

‘இந்த முடிவானது மக்களின் சுதந்திரத்தில் தாக்கம் செலுத்துகின்றது என்றாலும் இது பௌத்த மக்களின் கோரிக்கை என்றால் நாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ இதனை பிரச்சினைப்படுத்தவோ மாட்டோம்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் BBC சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

இது கிராமியப் பொருளாதாரத்திற்கும், பால் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

‘இலங்கைபோன்ற சிறிய பால் உற்பத்தி யாளர்கள் இருக்கும் நாட்டில் குறித்த விவசாயிகள் வயது போன மாடுகளை இறைச்சிக்கு விற்பதன் மூலம் தமது பொருளாதாரத்தை முகாமை செய்கின்றனர். ஆனால் இந்த தீர் மானத்தின் காரணமாக அவர்களது உற்பத்திச் செலவு அதிகரிக்கின்றது’ என பெஸ்ட் கெபிடல் இன் ஆய்விப் பிரிவின் தலைவர் டிமென்த மெதிவ் BBC சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.

டிமென்த மெதிவ் மேலும் கருத்துத் தெரி விக்கும்போது ‘கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அங்கு கருப்புச் சந்தை ஒன்று தோன்றும் குறித்த சந்தர்ப்பத்தில் இலாபத்தினை அடைவதற் கென்றே சிலர் இருக்கினர் இதன் காரணமாக  சட்டவிரோதமான நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்கிறார்.

(பிபிசி சந்தேசய)

1 comment:

  1. உலகத்தோடு இலங்கையை இணைப்பதற்கான ஒரு பாலம் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை, அல்லது அதிகமான தேரர்களை சுற்றுலா சென்று சுற்றிலும் உள்ள உலகில் நடப்பவைகளை கற்று வர உற்சாகம் ஊட்டும் வரை தொடரும் இது போன்றன!  முடியிலாத் தலையில் உதிப்பதெலாம் முடிவிலாத் தலை விதியாச்சி நமக்கு.

    ReplyDelete

Powered by Blogger.