September 19, 2020

சாராவை இந்தியாவிலிருந்து, நாடு கடத்த வேண்டும் - முஜிபூர் ரஹ்மான்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சாராவுக்கு நேரடி தொடர்புகள் உள்ளதால் அவரை நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை விடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து சாராவை நாடுகடத்தினால் முக்கியமான தகவல்களை பெறமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் நான் உதவ தயார் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் முன்னிலையில் நான் இதனை தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

15 கருத்துரைகள்:

முஜீபூர் ரகுமான் அவர்களே அந்த அபலையின் பெயர் சாரவல்ல புலஸ்தினி என்பதாகும். முஸ்லிம் விவாகச் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்து சாரா என பெயர் சூட்டப்பட்ட புலஸ்தினியை இந்தியா ஒருபோதும் நாடுகடத்தக்கூடது. புலஸ்தினியின் அம்மா அரபுநாட்டில் பணியில் இருக்கும்போது பயங்கரவாதிகளுக்கு ஆள்பிடிக்கிற அமைபொன்றின் பொதுச் செயலாளரான அப்துல் ரசாக் என்பவனால் சீரழிக்கபட்ட அப்பாவி புலஸ்தினி. புலஸ்தினியை இந்தியா அகதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும். முஜிபூர் ரஹ்மான் அவர்கள் புலஸ்தினியை விட்டுவிட்டு அப்துல் ரசாக் கைதுசெய்யபடுவதுபற்றி அவரது அமைப்பு தடைசெய்யப்படுவது பற்றி பேசுங்கள்.

Mr.jeyabalan.she is not a baby

Exactly, bring back Pulasthini from India and inquire about the blasts. She is one of the masterminds in the attacks.

Welsaid Mr ,jayapalan Anna

இந்தமாதிரியான பெண்களுக்கு எந்த ஈவு இரக்கமும் காட்டக்கூடாது .

இந்தமாதிரியான பெண்களுக்கு எந்த ஈவு இரக்கமும் காட்டக்கூடாது .

Yes Abdul Razeek is a very Dangerous man in our community..... please put him in the jail

இல்லை ஜெயபாலன் சகோதரரே! அப்துல் ரசாக்கை கைதுசெய்யலாம், விசாரரிக்களாம் இந்த அரசியல் விளையாட்டுக்காக பல அபலைகளின் உயிர்கள் மாய்க்கப்பட்டுவிட்டன அதுவும் முஸ்லிம்களின் பெயரினால். இதன் கட்டமைப்பை சரியாக அறிந்துகெள்ளவேண்டும் என்றால் நிச்சயாம சாரா எனும் புலஸ்தினி கண்டுபிடிக்கப்படவேண்டும். அப்போதுதான் முழுமையான இதன் பின்னிப்பவா்களை கண்டுபிடிக்கமுடியும் என்பதுதாக் எமது தாழ்மையான கருத்து.

As far as Asfar explained is correct.

ஜெயபாலனுக்கு எதிரான என்னுடைய கருத்துக்கள் எங்கே jaffna இணையதளமே. எதற்கு முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகதனம் ?

குற்றச்சாட்டுக்கள் சரியான முறையில் விசாரிக்கப்படல் வேணடும். உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவரகள் யாராயிருந்தாலும் சரியான பொருத்தமான தண்டனை வழங்கப்படல் வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பினால் முஸ்லிம் சமூகத்திற்கு அவப் பெயர் வேண்டும் என்றே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. தற்கால அரசியல் சூழ்நிலையின் காரணமாக எரிகின்ற நெருப்பில் மேலும் மேலும் எண்ணையை ஊற்றுவதுபோல் முஸ்லிம் சமூகத்தின் நிலைமை மாறிக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நீதிததுறையும் பாதுகாப்புத்துறையும் ஸ்திரமாகத்தான் இருக்கின்றன. எவர எப்படியான சாட்சியங்களை அளித்தாலும் இச்சம்பவத்தின் பின்னணி மிகவிரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றே நம்புகின்றோம். குற்றவாளிகள் கடல் கடந்து இருப்பினும் சட்டத்திற்கும் நீதிக்கும் தேவைப்படின் அவரகளும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படல் இன்றியமையாதது. அதுவே நீதி.

கனம் ஜெயபாலன் இன்னும் ஒருவரை பயங்கரவாதி என பட்டம் சூட்டுகுறீர்கள்,இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டி வரும்

Mr.ஜெயபாலன்,அப்துல் ராசிக் பயங்கரவாதி ஆயின் இலங்கை பாதுகாப்பு துறை அதனை செய்வார்கள் அத்துடன் அவர் இலங்கையில் இலங்கை பிரஜையாவவே உள்ளார்.குறித்த பெண் பயங்கரவாதியா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை நீதி துறையை சாரும். நெட்டிசெண்டின் போராளிகளை அல்ல.

மதிப்புக்குரிய பவுசி அவர்களே, என் வார்த்தைகளுக்கு பொறுபெடுக்கிறேன். நான் ஆயுத பாணிகளின் கோட்டைக்குள்ளேயே யாழ்முஸ்லிம்களை வெளியேற்றியது பயங்கரவாதம் என குற்றம் சாட்டியவன். ராசீக் பற்றிய என் கருத்து அறம் என்றே நம்புகிறேன். அறம்தான் மட்டும்தான் என்னை காக்கிறது. நான் போராளிகளதும் இராணுவத்தினதும் கொலை முயற்சிகளின்போதும் மூதூரிலும் கல்முனை பிரதேசத்திலும் முஸ்லிம் ஆயுதபாணிகள் குறுக்கீட்டின்போதும் அஞ்சாமல் எதிர்த்து வாதிட்டேன். அறம் தவறாதவரைக்கும் காப்பாற்றபடுவேன் என எப்பவும் நம்புகிறேன். புலஸ்தினி பற்றிய ராசிக்கின் வீடியோக்கள் கேட்டிருக்கிறீங்களா? என் அறிவுக்கு எட்டியவரைக்கும் ராசிக் பற்றிய என் கோபம் அறம் என நம்புகிறேன்.

அறம் என்பது இன்னொருவரை பயங்கரவாதி என சித்தரிப்பதல்ல இப்போதும் கூட எனது பிரதேசத்தில் பயங்கரவாத குழுக்களை சந்தித்ததாக மீண்டும் ஒரு சமூகத்தின் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் பழி போடுகிறீர்கள் இதுவும் உங்கள் பாக்ஷையில் அறம்தாநோ?
முஸ்லீம்களுக்கு வெளியேற்றியது நாங்கள் மட்டுமல்ல பிரபாகரன் கூட தவறு என்றுதான் சொன்னார் ஆனால் அதற்காக என்ன பிராயச்சித்தம் செய்தீர்கள்/செய்தார்கள்.
மனதில் எண்ணூவது எல்லாம் வார்தைகளாக சொல்வதற்கு முன் சிந்திக்க வேண்டும் ஜெயபாலன் ஐயா!

Post a comment